பயமறியா பிரம்மை திரை விமர்சனம் !!
உலகத்திரை விழாக்களில் பலவற்றில் கலந்துகொண்டு வந்திருக்கிற படைப்பு தான் பயமறியா பிரம்மை
ஒரு கதையின் எழுத்து பார்ப்பவனை பங்கேற்க வைக்கும் என்பது தான் இப்படத்தின் மையம்.
சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி 25 வருடங்களில் 96 கொலைகளை செய்து விட்டு ஜெயிலில் இருக்கிறார் ஜெகதீஷ். அவரை சந்தித்து புத்தக எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகிறார் எழுத்தாளர் கபிலன் அவரை சிறையில் சந்திக்கிறார். இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கபிலன் சொல்கிறார். அது எப்படி நடக்கும்? என்று ஜெகதீஷ் கேட்கிறார். ஜெகதீஷின் கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக விவரிப்பது தான் ‘பயமறியா பிரம்மை’. இதுவே திரைப்படத்தின் கதை.
இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் ஜெகதீஷ் கதாபாத்திரமாகவே நடித்துள்ளனர் திரையில் காண்பித்துள்ளார் இயக்குனர்.
அனைத்து நடிகர் நடிகைகளும் தனக்கு கொடுத்த வேலையை மிக கட்சிதமாக செய்துள்ளனர் நடிப்பில் எந்த குறையும் இல்லை நன்றாக நடித்துள்ளனர்.
இயக்குனர் சொல்ல நினைப்பதை கொஞ்சம் குழப்பத்துடன் சொல்லி இருக்கிறார் கதையை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினம்தான் உன்னித்து பார்க்க வேண்டிய விஷயம் தான் திரைப்படம் இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
படத்தின் கதைக்குழப்பம், மிக மெதுவாக நகரும் காட்சிகள் படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளது. சாதாரண ரசிகனுக்கு இந்தப்படம் பெரும் குழப்பத்தையே தரும்.
தீவிரமான சினிமா ரசிகர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் படியான படம் தான் இந்த பயமறியா பிரம்மை.