டிமான்டி காலனி திரை விமர்சனம்
தமிழில் வந்த மிகச்சிறந்த பேய்படங்களில் ஒன்று டிமான்டி காலனி. பல வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் வந்துள்ளது.
டிமான்டி காலனி படம் முடிந்த இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. முதல் பாகத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அருள்நிதி இந்த பாகத்தில் காப்பாற்றப்படுகிறார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அருள்நிதியை காப்பாற்றியது யார்? எதற்காக அவரைக் காப்பாற்றினார்கள்? முதல் பாகத்தில் இருந்த செயினிற்கும் டிமான்டிக்கும் கடைசியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
இதில் அருள்நிதியின் நடிப்பு வழக்கம் போல இருக்கிறது. எதார்த்தத்தை மீறாமல் அலட்டாத அவருடைய நடிப்பும் பிளஸ் ஆக இருக்கிறது. அதை போல் பிரியா பவானி சங்கருக்கும் கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களை அடுத்து அருண்பாண்டியன் பிக்பாஸ் அர்ச்சனா ஆகியோரின் கேரக்டர்களும் சிறப்பு.
திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை ரொம்பவும் முக்கியம். அதை உணர்ந்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
படத்தில் இருக்கும் ஒரு சில டுவிஸ்டுகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. குறைகள் சில இருந்தாலும் முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் திருப்திக்கும், த்ரிலுக்கும் பஞ்சம் இல்லை. பல காட்சிகளில் இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். டிமான்டி காலனி 2 சுவாரஸ்யமாக உள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து ஒரு நல்ல பயமுறுத்தும் பேய் படம் பார்த்த உணர்வை இப்ப படம் மூலம் கொடுத்து ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறார்.
டிமாண்டி காலனி ரசிகர்களை திருப்திபடுத்தி புது அனுபவம் தந்துள்ளது இப்படம்.