Thangalaan Movie Review
பா ரஞ்சித் சியான் விக்ரம் கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம்.
மாய யதார்த்த பாணியில் தமிழில் அதிலும் வரலாற்று பின்னணியில் வெளிவந்திருக்கும் படம்
கோலார் பகுதியில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்படும் பிரிட்டிஷ் ஜெனரல் க்ளெமென்ட், அதை எடுக்க ஆசைப்படுகிறார். ஆனால் அதற்கு அவருக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில், வட ஆற்காடு பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள், வழக்கமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதைக் கேள்விப்படுகிறார். இதனையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் மற்ற பழங்குடி மக்களை அந்த வேலையில் ஈடுபடுத்துகிறார். இதற்கிடையே, அப்பகுதியில் இருக்கும் ஒரு தேவதை, அந்தத் தங்கத்தை எடுக்கவிடாமல் பாதுகாத்து வருகிறது. அதைத்தாண்டி அவர்கள் தங்கத்தை எடுத்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.
விக்ரம் என்ற நடிப்பு அசுரனுக்கு தீனிபோட்டிருக்கிறது தங்கலான். அசர வைக்கும் அவரின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவனை என அனைத்திலும் அபார உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அவருக்கு இணையான காட்சிகள் பார்வதிக்கும், மாளவிகா மோகனனுக்கு இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் கலக்கி இருக்கிறார்கள். வைணவ பக்தராக வரும் பசுபதியின் கதாபாத்திரம் தனித்து கவனம் பெறுகிறது. எந்த கதாபாத்திரம் என்றாலும் ஊதித் தள்ளிவிடுவார் பசுபதி.
ஜிவி பிரகாஷ் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். ஏற்கனவே பாடல்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது அதை தொடர்ந்து படத்தில் கதையோடு பயணிக்கும் பின்னணி இசையும், இடைவேளை காட்சியில் வரும் அந்த பிஜிஎம் என அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது.
விக்ரமின் நடிப்பும், பா.ரஞ்சித்தின் இயக்கமும் சேர்ந்து இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வரலாற்றுப் படமாக உயர்த்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு மிக முக்கியமான படைப்பாக வந்துள்ளது தங்கலான்