அகத்தியா விமர்சனம்

0
89

இயக்கம் – பா விஜய்
நடிகர்கள் – ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், ஷாரா, யோகி பாபு
தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாண்டிச்சேரியில் ஒரு பழைய அரண்மனையை வாடகைக்கு எடுத்து பேய் வீடு ஒன்றை வடிவமைக்கின்றனர். அதோடு அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த பழைய காலத்து பியானோவையும் எடுத்து வைக்கின்றனர். ஒரு நாள் அந்த பியானோவை ஒரு பெண் வாசிக்க தொடங்கிய உடன் அதில் இருந்த மர்ம அறை திறக்க தொடங்குகிறது. அப்போது நாயகனுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டு, ஒரு சில காட்சிகள் மனதுக்குள் தெரிய தொடங்குகிறது. அதோடு அதில் கிடைத்த வீடியோ பிலிம் ரோலை பிளே செய்து பார்த்த போது, அதில் 1940ல் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் கவர்னராக இருந்த எட்வர்டின் சகோதரி மெட்டல்டாவுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயை சித்த மருத்துவர் குணப்படுத்துகிறார். இதனால் மெட்டல்டா அவரை காதலிக்க தொடங்குகிறார். இந்த நிலையில் எழும்பு புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதாக சொல்லி அதற்கான வேலையில் அந்த வைத்தியர் ஈடுபடுகிறார். அந்த மருந்தை தன் வசப்படுத்த நினைக்கிறார் அந்த பிரெஞ்ச் கவர்னரான எட்வர்ட். அதன் பிறகு நடந்தது என்ன? நாயகனுக்கு ஏன் அந்த உணர்வு ஏற்பட்டது? இருவருக்கும் என்ன தொடர்பு? என்பதை படத்தின் மீதி கதை.

இந்தப் படம் ஹாரர், பேண்டஸி, ஹிஸ்டாரிக்கல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்த ஒரு பாடமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பா விஜய். 1940 கால கட்டத்தையும், 2024 கால கட்டத்தையும் கனெக்ட் செய்யும் விதமாக ஒரு நாட் எடுத்து அதில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சரியாக திரைக்கதையில் புகுத்தி இருக்கிறார். இப்போதைய நவீன உலகத்தில் பெருகிவரும் அரிய நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு என்பதை டேக்அவே மெசேஜாக இயக்குனர் சொல்லி இருக்கிறார். கிளைமாக்ஸில் கேமராமேன் உதவியுடன் புதிய யுத்தியில் பேண்டஸி சண்டைக் காட்சியை புகுத்தி இருப்பது இயக்குனரின் தொழில்நுட்ப அப்டேட்டை காட்டுகிறது.

இந்தப் படத்தில் இரண்டு நாயகர்கள் உள்ளனர், ஜீவாவின் நடிப்பு ரசிக்கும் படியாக உள்ளது. அதோடு பழைய காலத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள அவர் எடுக்கும் முயற்சி ரசிக்கும்படியாக உள்ளது.

ராஷி கண்ணாவுக்கு காட்சிகள் குறைவுதான். வழக்கமான கதாநாயகி போல் வந்து செல்கிறார். இரண்டாவது ஹீரோவாக நடித்துள்ள அர்ஜுன் படத்தின் ஆணிவேராக உள்ளார். நண்பர்களாக வரும் ஷாரா, இந்துஜா ஆகியோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். சார்லி, ரோகிணி, செந்தில், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் ஒரு சில காட்சிகள் வந்து செல்கின்றனர். யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் கெஸ்ட் ரோலில் வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக இளையராஜாவின் இசையில் வெளிவந்த என் இனிய பொன் நிலாவே பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளது சிறப்பு. பின்னணி இசையும் மிரட்டலாக உள்ளது. தீபக் குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியை ஒளிப்பதிவு செய்த விதம் சிறப்பு.

ஹாரர் படத்திற்கு நடுவே நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் சிறப்பை திரைக்கதையில் புகுத்தி இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ். அதோடு 1940 காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையில் அந்த கால பொருட்கள், ரயில் பெட்டி மற்றும் இன்ஜின்,உடை என அனைத்தையும் ஆர்ட் டைரக்டர் மூலம் திரையில் காட்டி இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் இந்த “அகத்தியா” ஒரு த்ரிலிங் எண்டர்டெயினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here