இயக்குனர் – அறிவழகன்
நடிகர்கள் – ஆதி , சிம்ரன் , லட்சுமி மேனன் , லைலா
இசை – தமன்
தயாரிப்பு – 7ஜி ஃபில்ம்ஸ் – சிவா & பானுப்ரியா சிவா
நாயகன் மும்பையில் ஆவிகளை சப்தங்கள் மூலம் கண்டறியும் நிபுணராக இருக்கிறார். இதனால் தன்னிடம் வந்து குறை சொல்லும் ஒவ்வொருவரின் அமானுஷ்ய பிரச்சினைகளையெல்லாம் சரி செய்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மூணாரில் மருத்துவ கல்லூரியில் மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்குப்பின்னணியில் ஆவிகள் இருக்கிறதா? வேறு ஏதாவது காரணமா? என்பதை தெரிந்து கொள்ள நாயகனை அழைக்கிறார்கள். அவன் கல்லூரிக்குள் வந்த பிறகு சப்தங்கள் மூலம் ஆவிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார். இருந்தும் அடுத்தடுத்து கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடைசியில் கொலைகளுக்கு காரணம் என்ன? உண்மையிலேயே அதற்கு பின் இருப்பது அமானுஷ்யமா என்பதை கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
ஈரம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்கள் விமர்சனம் என இரண்டு தரப்பினரும் கொண்டாடும் வகையில் அப்படம் இருந்தது.2009 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தண்ணீரை வைத்து பயம்காட்டியது முற்றிலும் வித்யாசமான ஒரு முயற்சியாக இருந்தது. ரசிகர்களையும் அறிவழகனின் இந்த புது முயற்சி வெகுவாக ஈர்த்தது. அன்றைய காலகட்டத்தில் வெளியான பேய் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட வித்யாசமான ஒரு படமாக அமைந்தது ஈரம். அப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அறிவழகன்- நடிகர் ஆதி கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.
இந்தப்படத்தில் நடிகர் ஆதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சப்தங்களை விவரிக்கும் ஒரு வல்லுனராக நடித்திருக்கிறார், தனக்கு கொடுக்கப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்,
இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன எல்லோருமே சிறப்பான வேலையை செய்திருக்கிறார்கள் . பேய் கதைகளுக்கெல்லாம் லாஜிக் தேவை இல்லை என்றாலும் நம்பும் படியாக கதைக்களத்தை இயக்குனர் காண்பித்து இருக்கிறார். லட்சுமி மேனன் சந்திரமுகி2 படத்தில் நடித்த அதே கதாபாத்திரம் போன்ற சாயல் ஆங்காங்கே தெரிகிறது.
படத்தின் முதல் பாதி கதையை பற்றி விவரிக்கும் வண்ணம் இருந்தது, நம்மை திரையை விட்டு விலக விடாமல் இயக்குனர் திரைக்கதையை நகர்த்தி சென்றிருந்தார், பிறகு இரண்டாம் பாதியில் நடக்கும் அசம்பாவிங்களுக்கான காரணம் மற்றும் அதன் உள்ளே இருந்த கதாபாத்திரங்களின் சுய ரூபத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது,
இந்தப்படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார், படம் முழுக்க இரவு நேர காட்சிகள் இருந்தாலும் அதனை மிகவும் துல்லியமாக திரையில் காட்சி படுத்தியுள்ளார், இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் இவரது ஒளிப்பதிவுதான், மேலும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், அவரதி இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருந்தது, பின்னணி இசையும் சிறப்பாக இருந்தது,
இந்தப்படத்தை எழுதி இயக்கியுள்ள இயகுனர் அறிவழகன் , முதல் படத்தில் தண்ணீரை முக்கியமாக வைத்து ஒரு த்ரில்லர் அனுபவத்தை மக்களுக்கு கொடுத்தார், இந்தப் படத்தில் சப்தம் மற்றும் அதன் வேறுபாட்டை வைத்து மக்க்களை பயமுறுத்தியுள்ளார். படத்தின் மேக்கிங்கிற்கு ஒரு பெரிய சல்யூட் என்றுதான் கூறவேண்டும் , அத்தனை காட்சிகளூம் ஒரு ஹாலிவுட் பட தரத்தை எட்டியுரிந்தது,
மொத்தத்தில் இந்த ”சப்தம்” த்ரில்லர் கொண்டாட்டம்