ராஷ்மிகா மந்தனா – Unformula Films நிறுவனத்தின் Production No 1 அறிவிப்பு: அதிரடியும் ஆவலையும் கிளப்பும் போஸ்டர் வெளியீடு – தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது!

0

தேசிய அளவில் இந்திய இளைஞர்களின் கிரஸ்  எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த சில ஆண்டுகளில்  தொடர்ச்சியாக பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப் திரைப்படங்களை தந்து வருகிறார். புஷ்பா, புஷ்பா 2, அனிமல், மற்றும் சமீபத்திய குபேரா போன்ற படங்களில், தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்ததோடு,  வித்தியாசமான களங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக Unformula Films சார்பில் உருவாகும் Production No 1, நாயகியை  மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில், தற்போது நடிகை ரஷ்மிகா மந்தனா  நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, மிக  வித்தியாசமான போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா ஒரு வாளை (spear) கையில் ஏந்தி, வலிமையான மற்றும் போராட்ட முகத்துடன் காட்சியளிக்கிறார்.

போஸ்டரை பகிர்ந்து, ராஷ்மிகா கூறியதாவது..,
“நாங்கள் எந்த மாதிரி வேலை செய்திருக்கோம் என்பதை உங்களுக்குக் காட்டும் நேரம் வந்தாச்சு! இது வரைக்கும் நீங்க பார்த்திருக்காத ஒரு புதிய ராஷ்மிகாவை… இதில் பார்க்கலாம். நானும் ரொம்பவே எக்ஸைட்டடா இருக்கேன்!”

போஸ்டரில் “Rashmika Unleashed” என்ற வாசகம் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது!

மேலும், ரசிகர்களிடம் அவர் ஒரு  சவாலையும் விடுத்துள்ளார்.
“என் அடுத்த படத்துக்கான பெயரை கண்டுபிடிக்க முடியுமா? 😉 யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்… ஆனால் யாராவது கண்டுபிடித்தால், நிச்சயமாக உங்களை வந்து சந்திக்கிறேன்! 🐒😎” என X (Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இணையம் முழுக்க தாங்கள் கணித்த தலைப்பை பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.

“Hunted. Wounded. Unbroken.” என்பது இந்த படத்தின் டேக் லைன். படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மற்ற விவரங்களும் நாளை வெளியாகவுள்ளன.

இந்த படத்தின் மூலம், ராஷ்மிகா முழுமையான நாயகியாக  திரை எல்லைகளை கடந்து பயணிக்கவுள்ளார்.

இப்போது எல்லோரது பார்வையும் நாளைய படத்தலைப்பு  வெளியீட்டை நோக்கி காத்திருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here