“அஜித் அண்ணா தான் இன்ஸ்பிரேஷன்!” ~ ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியன் கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா!

0

சென்னை, இந்தியா- ஜூன் 18, 2025: ‘மங்காத்தா’, ‘பேக்பென்ச் ஸ்டூடண்ட்’, ‘டபுள் XL’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார்.

இந்த வருடம் அதாவது 2025 ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம். இந்த அனுபவத்தை “சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது” என்று நடிகர் மஹத் கூறினார்.

மேலும் கோயனுடன் பயிற்சி பெற்றது பற்றி விவரிக்கும்போது, “கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது” என்றார்.

இந்தப் புதிய அத்தியாயத்தின் மூலம் மஹத் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, உடல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் தன்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதையும் இதன் மூலம் உறுதி செய்துள்ளார். “நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்” என்றார்.

நடிகர் மஹத் ராகவேந்திரா பற்றி:

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. அவர் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’மங்காத்தா’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் ’ஜில்லா’, ’டபுள் எக்ஸ்எல்’ மற்றும் ’பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களிலும் தனது நடிப்பு மூலம் முத்திரை பதித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் இறுதிப் போட்டியாளராகவும் வந்தார். தற்போது நடிகராக மட்டுமல்லாது பயிற்சி பெற்ற அத்லெட்டாகவும் மாறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here