இயக்கம் – மணிரத்னம்
நடிகர்கள் – கமலஹாசன் , சிம்பு , திரிஷா, அம்பிகா
இசை – ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு – ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல்
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான தக் லைப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஒரு கேங்கஸ்டர் அவருடைய இருக்கைக்கு ஆசைப்படும் அவர்து ரத்த பந்தங்கள் மற்றும் வாரிசுகள். இது தான் தக் லைப் கதை மூலம்.
மணிரத்னத்தின் அற்புதமான மேக்கிங்க் இந்த படத்திலும் ஜொலித்து இருக்கிறது. காட்சியமைப்புகள், நடிப்பு, இசைகோர்வை, எடிட்டிங்க் என கனகச்சிதமாக பொருந்திய நேர்த்தியான திரை உருவாக்கமாக தக் லைப் இருக்கிறது.
நடிப்பை பொறுத்தவரை கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் திரை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார்கள். சின்ன சின்ன இடங்களில் அவர்கள் காட்டும் பாவனைகள், ஒரு தேர்ந்தெடுத்த கலைஞர்களின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
அன்பறிவு உடைய சண்டை வடிவமைப்பு மணிரத்னம் படங்களில் இதுவரை இல்லாத ஒரு புது பாணியை உருவாக்கி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் கமல் இடையே ஏற்படும் சண்டை காட்சிகளில், ADERLINE பொங்கி எழும் படி உருவாக்கப்படு இருக்கிறது.
படம் தடுமாறிய இடம் திரைக்கதை தான். நடிப்பு, ஆக்சன் என அனைத்திலும் பின்னி பெடல் எடுத்த, திரைக்கதையில் கொஞ்சம் சருக்கு கிறது. திரைக்கதையில் ஒட்டமுடியாத காரணத்தினால், படமும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் இந்த தக் லைஃப் ஆக்சன் அதிரடி