Ace Movie Review

0
171

இயக்கம் – ஆறுமுககுமார்
நடிகர்கள் – விஜய் சேதுபதி, ருக்மிணி, யோகி பாபு
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – 7சி எஸ் எண்டர்டெயின்மெண்ட் – ஆறுமுககுமார்

ஒருவன் பழைய வாழ்க்கையை மறந்து, புதிய வாழ்க்கையை வாழ மலேசியாவுக்கு செல்கிறான், அவனை உறவினர் என்று நினைத்து அடைக்கலம் தருகிறார், மலேசியாவில் வாழும் ஒருவர். எதிர்வீட்டில் வசிக்கும் பெண்ணை காதலிக்க தொடங்குகிறார் , அவருக்கு விலையுயர்ந்த உடையை பரிசளிக்க கடன் வாங்க செல்கிறார். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரிய தொகைக்கு கடனாளியாக சிக்குகிறார். அதேவேளை உதவி செய்த உறவினரின் , தோழியையும் கடனில் சிக்கி தவிக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகளை தீர்க்க வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார், நாயகன்
இந்த விஷயம் வில்லன்களுக்கு தெரிந்து முழு பணத்தையும் கறக்க முடிவு செய்தார்கள். இன்னொரு பக்கம் போலீசும் விசாரணையை முடுக்கி விடுகிறது, நாயகனை போலீசார் நெருங்கினார்களா? வில்லன்களிடம் இருந்து எப்படி தப்பித்தார்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

காதல், ஆக்சன், நகைச்சுவை என முப்பரிமாண நடிப்பை காட்டி கலக்கி இருக்கிறார், விஜய் சேதுபதி. கதைக்கு தேவையானதை கச்சிதமாக கொடுத்து, அலட்டல் இல்லாத நடிப்பால் அலங்கரிக்கிறார். மற்ற படங்களை விட இந்த படத்தில் சிறிது வித்தியாசம் தெரிகிறது, ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவே நடித்துள்ளார்,

கன்னடத்தில் வளர்ந்து வரும் முக்கிய நாயகி இந்தப் படத்தில் நடித்துள்ளார், எதார்த்த நடிப்பால் அனைவரையும் வசீகரிக்கிறார் ருக்மணி வசந்த். கொஞ்சல் நடிப்பில் அவரது கோபமும் ரசிக்க வைக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுக்க பயணிக்கும் யோகிபாபு, தனது காமெடியால் கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இருவரும் இணைந்து படத்தை துளி கூட போர் அடிக்காமல் செய்துள்ளனர், வில்லன்களிடம் அவர் சிக்கி கொள்ளும்  காட்சிகளில் வரும் காட்சிகள் நல்ல நகைச்சுவை,

இந்தப் படத்தில் திவ்யாபிள்ளை அழகான அறிமுகம். பி.எஸ்.அவினாசும், பப்லு பிரித்விராஜும் வில்லத்தனத்தில் போட்டிபோட்டு மிரட்டியுள்ளனர். ராஜ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார், அவரது ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. படம் நன்கு கலர் ஃபுல்லாக இருந்தது.
மேலும் சாம் சி.எஸ். இசை படத்தின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது, .

மொத்த படத்தையும் பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கலகலப்பான கதைக்களத்தில் படத்தை இயக்கி கவனிக்க வைக்கிறார், ஆறுமுககுமார்.

மொத்தத்தில் இந்த ‘ ஏஸ் ‘ கமர்ஷியல் சரவெடி,  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here