Devil’s Double Next Level Movie Review

0
299

இயக்கம் – பிரேம் ஆனந்த்
நடிகர்கள் – சந்தானம் , கீதிகா திவாரி, செல்வராகவன் , கௌதம் மேனன், யாசிக்கா, கஸ்தூரி
இசை – ஆஃப்ரோ
தயாரிப்பு – தி ஷோ பியூபில், நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் – ஆர்யா

யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் ஒருவர் ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது.  அந்த அழைப்பின் பேரில் அவரது குடும்பம் அந்த திரையரங்கத்திற்கு செல்ல, அங்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களை காப்பாற்ற அவரும் உள்ளே செல்கிறார். அப்போது அவரும், அவரது குடும்பமும், அந்த திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். சைக்கோ கிரைம் திரில்லர் மற்றும் திகில் ஜானர் திரைப்படமான அதில் சிக்கிக் கொண்ட தனது குடும்பத்தினர், படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து கொள்ளும் அவர் , அந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார், என்பதை வழக்கமான பாணியிலும், சற்று குழப்பாமான பாணியிலும் சொல்வதே ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’.

உருவம், உடை, பேச்சு ஆகியவற்றில் மாற்றத்தை காட்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . தனது வழக்கமான அணியினர் உடன்,  வழக்கமான காமெடிகளை கொண்டு படத்தை தாங்கி பிடித்திருக்கும் சந்தானம், உடன் நடித்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்வையாளர்களை பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

நாயகியாக மட்டும் இன்றி பேயாகவும் நடித்திருக்கிறார் கீதிகா திவாரி. இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் என புதிய காமெடி  கூட்டணி மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளானர்

இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்து நம்மை படத்துடன் ஒன்ற வைத்துள்ளது, .ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி காட்சிகளை வண்ணமயமாகவும், கமர்ஷியலாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், காமெடி கதையாக இருந்தாலும், திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ஹீரோ, என்ற பாணியில் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

சப் டைடில், நான் கடவுள் ராஜேந்திரனின் சில காட்சிகள், வீண் பேச்சு பாபு கதாபாத்திர காட்சிகள் ஆகியவை சிரிக்க வைக்கின்றனர்,  கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் போன்றவர்களின் கதாபாத்திரம் நன்றாகவே இருந்தது,

முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் திகில் நகைச்சுவை என மாறி விடுகிறது . படம் முழுவதும் திரை விமர்சகர்களை கேள்வி கேட்டு, கலாய்த்திருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், இறுதியில் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் நல்ல படம் ஓடும், என்று பதில் அளித்திருக்கிறார்.

மொத்தத்தில், ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ காமெடி ரசிகர்களுக்கு ட்ரீட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here