இயக்கம் – தம்பிதுரை மாரியப்பன்
நடிகர்கள் – விவேக் பிரசன்னா, சாந்தினி , சஞ்சீவ் , பூர்ணிமா ரவி , ஆனந்த் நாக் , நிழல்கள் ரவி, வையாபுரி
இசை – ஆர் எஸ் ராஜ் பிரதாப்
தயாரிப்பு – Turm Production House – உமா மகேஸ்வரி
வெ்வேறு கதாபாத்திரங்களின் கதை ஒரு கட்டத்தில் ஒருவருவருகொருவர் தொடர்புடையதாக இருக்கிறது, மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை மைய கருத்தாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது,
ஒரு கணவன் மனைவி இருவருக்கும் திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் இருக்கிறது, கணவனுக்கு தன்னால் குழந்தை பெற முடியாத குறை இருப்பது தெரிந்தும் மனைவியிடம் அதனை மறைத்து அதற்கான சிகிச்சை மேற்கொள்கிறார், இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் திருட்டு வேலை செய்யும் ஒரு காதல் ஜோடிகள் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர் , இவர்களுக்குள் என்ன சம்பந்தம் இவர்களின் வாழ்கையை எது இணைக்கிறது என்பதை மருத்துவ துறையில் நடக்கும் உண்மைகளை வைத்து விவரிப்பதே இந்த ” ட்ரவுமா”
இந்தப் படத்தில் குழந்தை பெரும் தன்மை இழந்த கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் பிரசன்னா நடித்துள்ளார், இந்த கால கட்டத்தில் சிலருக்கு இது போன்ற குறைபாடுகள் இருப்பது உண்டு , அதனை சரியாக புரிந்து கொன்டு அப்படி பாதிக்கப்பட்டோரின் மன நிலையை அறிந்து கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார் பிரசன்னா , நாளுக்கு நாள் குணசித்திர கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார் ,
அதே போல அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி ஒரு இயல்பான நடிப்பை வெலிக்காட்டியுள்ளார், குழந்தை இல்லாத பெண்கள் என்னென்ன சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்பதை அலட்டிக் கொள்ளாமல் அழகாக வெளிக்காட்டியுல்லார் , குழந்தை இல்லாத வீட்டில் கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும் என்பதை நம் கன் முன்னே கொண்டு வந்துள்ளார்,
மற்றொரு கதையில் நடிகை பூர்ணிமா ரவி தனது காதலனுடன் இணைந்து திருட்டு வேலை செய்து வருகிறார், பிக் பாஸ் மூலம் பலரிடம் பிரபலமாக இருக்கும் பூர்னிமாவிற்கு இப்படம் ஒரு நல்ல தீனியாக இருக்கிறது, காதல் , காமம் , சோகம் என அனைத்து உணர்வுகளையும் இப்படத்தில் வெழிக்காட்டியுள்ளார்,
மேலும் அவரது காதலனாக சஞ்சீவ் நடித்துள்ளார், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் உள்ள சுபாவங்களை உள்வாங்கி சிறப்பாக நடித்திருந்தார், நிழல்கள் ரவி , வையாபுரி மற்றும் ஆனந்த் நாக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் .
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆர் எஸ் ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார், பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது, எமோஷன் காட்சிகள் மற்றும் திரில்லர் காட்சிகளில் பின்னணி இசை பெரிதும் உதவியுள்ளது, ஒளிப்பதிவை அஜித் சீனிவாசன் கையாண்டுள்ளார், பெரிய பிரம்மாண்ட செட்கள் இல்லையென்றாலும் மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கி அழகாக நம் கன் முன் கொண்டு வந்துள்ளார்,
இந்தப் படத்தை தம்பிதுரை மாரியப்பன் எழுதி இயக்கியிருக்கிறார், தற்போதைய கால கட்டத்தில் குழந்தை இல்லாமல் இருந்தால் சமூகம் நம்மை எப்படி பார்க்கும் , அதனால் தப்பே செய்யாத மனிதர்கள் எப்படி குற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர் என்பதை அழகாக நம்மிடம் கடத்தியுள்ளனர், சந்தர்ப்ப சூழ்நிலையால் எப்படி குற்றதிற்கு ஆளாகின்றனர் என்பதையும் சொல்லியுள்ளனர்,
இந்த காலத்தில் நூறில் ஆஐந்து நபருக்கு குழந்தையின்மை இருக்கிறது, அதை மருத்துவத்துறையில் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர் , அதை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கின்றனர் என்பதை சொல்லும் ஒரு அறிவுரையாக இப்படம் உருவாகியுள்ளது ,
மொத்தத்தில் இந்த “ட்ரவுமா” ஒரு விழிப்புணர்வு .