இயக்கம் – கமல் பிரகாஷ்
நடிகர்கள் – ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி, சேதன் , அழகம் பெருமாள்,
இசை – ஜிவி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ஜீ ஸ்டுடியோ & ஜிவி பிரகாஷ் குமார்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார். அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைப்பவர், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன் திரும்பினாரா ? இல்லையா ? என்பதே இப்படத்தின் கதை.
இந்தப் படம் ஜிவி பிரகாஷ் குமாருக்கு நாய்கனாக 25வது படம் .மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் ஒரு மீனவனை போலவே நடித்திருக்கிறார். தன்னால் முடிந்த உழைப்பை இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளார்,
நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரை திணிப்பதற்காகவே சில காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
VFX காட்சிகள் மற்றும் கிரீன் மேட் படங்கள் என்றாலே கோகுல் பினாய் தான் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒளிப்பதிவாளர், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வந்துள்ளார்,
இந்தப் படத்திற்கு நாய்கன் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார், நடிகர் என்ற பொறுப்பை விட இசையமைப்பாளராக சாதித்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தனது சொந்த படத்தில் தரமான இசையை கொடுத்துள்ளார்,
இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்லியிருக்கிறார். இது போன்ற கதை தமிழ் சினிமாவில் புதிது தான் , அதை நன்றாக வடிவமைத்துள்ளார் இயக்குனர், கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவற்றின் மூலம் படக்குழுவின் உழைப்பு நன்றாக தெரிகிறது,
மொத்தத்தில், ‘கிங்ஸ்டன்’ ஒரு ஃபேண்டஸி திரில்லர்.