பேபி & பேபி விமர்சனம்

0
58

படத்தில் சத்யராஜ் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் தான் ஜெய். இவர் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த பிரக்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், தன்னுடைய தந்தைக்கு பயந்து ஜெய் தன்னுடைய மனைவியுடன் வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஜெய் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் சத்யராஜ். அதோடு ஜமீனுக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற கவலையிலும் சத்யராஜ் இருக்கிறார்.

இந்த சமயத்தில் தான் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த தகவல் அறிந்த சத்யராஜ், ஜெயின் மீது இருந்த கோபத்தை விட்டு விடுகிறார். பின் அவர், ஜெய்யை உடனடியாக திரும்பி வர சொல்கிறார். இதனால் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல ஜெய், பிரக்யா மற்றும் இவர்களுடைய குழந்தையும் விமான நிலையம் வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜாதகம் சாஸ்திரம் என்று ஊறிப் போய் இருப்பவர் தான் இளவரசு. இவருக்கு மகனாக யோகி பாபு இருக்கிறார்.

ஜாதகத்தில் வெளிநாட்டு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னதால் யோகி பாபு வெளிநாட்டிற்கு போகிறார். வெளிநாட்டில் சாய் தன்யா என்பவரை யோகிபாபு திருமணம் செய்கிறார். திருமணம் செய்த விஷயத்தை கேள்விப்பட்டு இளவரசன் கோபப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய ஜாதகப்படி வீட்டிற்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் மட்டுமே குடும்பம் செழிக்கும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஏற்ப யோகி பாபுவிற்கும் பெண் குழந்தை பிறக்கிறது.

இதனால் யோகி பாபு ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் யோகி பாபுமே தன்னுடைய மனைவி குழந்தையுடன் விமான நிலையத்திற்கு வருகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெய் மற்றும் யோகி பாபு குழந்தைகள் மாறிவிடுகிறது. விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது குழந்தை மாறிவிட்டதால் இரண்டு குடும்பமே கதறி அழுகிறது. அதற்கு பின் என்ன நடந்தது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தின் ஹீரோ ஜெய் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். மற்ற படங்களை விட இந்த படத்தில் இவர் கொஞ்சம் வித்தியாசமாக நடித்து இருக்கிறார். சண்டை, எமோஷனல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து படத்தில் கதாநாயகிகளாக வரும் பிரக்யா, சாய் தன்யா இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். சத்யராஜ் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். அதேபோல் இளவரசும் தனக்கு கொடுத்த வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார்.

இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே நன்றாக இருக்கிறது. ஆனால், சில இடங்களில் காமெடியில் இயக்குனர் திணறி இருக்கிறார். காமெடியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். யோகி பாபு காமெடி நன்றாக இருக்கிறது. காமெடியை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். ஆனால், அதில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் சூப்பராக இருக்கும். பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே. மொத்தத்தில் பேபி & பேபி இருக்கிறது. குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here