‘வல்லான்’ – விமர்சனம்

0
81

சுந்தர் சி படங்கள் ஹிட்டாகி வரும் சூழலில், அவரது நடிப்பில் வெளிவந்துள்ள படம் வல்லான்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான சுந்தர் சி தான் திருமணம் செய்ய இருக்கும் நாயகி தன்யா காணாமல் போக அவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

மறுபக்கம் தொழில் அதிபரான ஜெயக்குமாரின் மருமகனான கமல் காமராஜு மர்மமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர். இவ்வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரித்து தரும்படி போலீஸ் உயரதிகாரி சுந்தர் சி’யிடம் கேட்கிறார். சுந்தர் சி வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த வழக்கை பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பெண் நிருபர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்.

இதே சமயத்தில், காட்டிற்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது.  அந்த சடலம்  தன் காதலி தன்யா ஹோப் தான் என்ற உண்மை சுந்தர் சி க்கு தெரிய வருகிறது. இறுதியில் நாயகன் சுந்தர் சி உண்மையான கொலைகாரன் யார்? என்பதை கண்டுபித்தார்ரா? இல்லையா ? நாயகி தன்யா உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்பதே ‘வல்லான்’ படத்தின் மீதிக்கதை.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி, அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். உண்மையை கண்டுபிடிக்க அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் பாராட்டுக்குரியது. நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த ஹேபா படேல், அபிராமி வெங்கடாசலம் இருவரும் தத்தங்களது கதாபாத்திரங்களை மிக கச்சிதமாக செய்திருக்கிறார்கள். தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. மணி பெருமாள் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் மர்மங்களை மைய கருவாக வைத்து ஒரு முழுநீள சஸ்பென்ஸ் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வி எஸ் மணி சேயோன் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஒரு நல்ல திரில்லர் படம் விரும்புவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப்படம்.

நடிகர்கள் : சுந்தர் சி, தன்யா ஹோப், ஹேபா படேல், கமல் காமராஜு, அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன்

இசை : சந்தோஷ் தயாநிதி

இயக்கம் : வி எஸ் மணி சேயோன்

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here