இயக்குனர் – விகர்ணன் அசோக்
நடிகர்கள் – கவின், ஆண்ட்ரியா , சார்லி
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ஆண்ட்ரியா – ப்ளாக் மெட்ராஸ் டாக்கீஸ்
சென்னையில் உள்ள ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இருந்து தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்க்க பட்டிருந்த பல நூறு கோடி பணம், மறைந்த நடிகர் எம் ஆர். ராதா முகமூடி அணிந்த சில மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்த பணம் ஒரு அரசியல் வாதிக்கு சொந்தமானது. இதை கண்டுபிடிக்க தனியார் டிடெக்ட்டிவ் நபரும், பல சமூக சேவைகள் செய்யும் ஒரு பெண்ணும் வருகிறார்கள். இவர்கள் இருவரும் தீவிரமாக கொள்ளை அடிக்க பட்ட பணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே உண்மையான டிடெக்ட்டிவ் மற்றும் சமூக சேவகர்கள் இல்லை என்று தெரிய வருகிறது. இவர்கள் நோக்கம் என்ன? பணம் கிடைத்ததா? அரசியல் வாதி என்ன செய்தார் என்று சொல்கிறது மீதிக்கதை.
தனக்கு எப்படியும் ஒரு வெற்றி வேண்டும் என்ற உழைப்பு கவினின் நடிப்பில் தெரிகிறது. இதற்கு முந்தய படங்களில் நடித்ததை விட மாஸ்க் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஹீரோவாக நடித்திருந்தாலும் அதற்க்கான இலக்கணங்கள் இல்லாமல் அப்பாவியாக, சிறிது காமெடி கலந்து நடித்துள்ளார் கவின்.
படத்தின் முதல் காட்சியில் தொடங்கும் பரபரப்பு கடைசி வரை குறையவே இல்லை. படத்தில் கதாபாத்திரங்கள் உருவாக்கிய விதமும் நன்றாக உள்ளது. சமூக சேவகி என்ற போர்வையில் ஆண்ட்ரியாவின் இன்னொரு மோசமான பக்கம் தெரியவரும் காட்சி, அமைதியான கேரக்டரில் வரும் சார்லி, வேறொரு மனிதராக வந்து ட்விஸ்ட் தருவது போன்ற இடங்களை சொல்லலாம்.
படத்தின் முக்கிய பலமாக ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் மற்றும் ஜி.வி பிரகாஷை சொல்லலாம். ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதையை நம்மிடம் சொல்வது போல் உள்ளது. ஜி.வி இசையில் கண்ணுமுழி பாடல் தளம் போட வைக்கிறது. இதுதான் எங்கள் உலகம் ரீமிக்ஸ் பாடல் சூப்பர்.
அப்பாவி நபராக வந்து கேரக்டர் மாறும் இடத்தில சபாஷ் போடா வைக்கிறார் சார்லி. ஆண்டிரியா வில்லியாக நடித்தாலும் சற்று டீசெண்டாக காட்டியுள்ளார் டைரக்டர். படத்தின் தயாரிப்பாளர் என்ற காரணமும் இருக்கலாம். ஹீரோயின் ரூஹானி ஓரளவு நடித்திருக்கிறார் .
படத்தில் பாராட்ட பட வேண்டிய முக்கிய அம்சம், படம் கதையின் முதலில் இருந்து தொடங்காமல் பாதியிலிருந்து அதாவது பணம் கொள்ளையடிக்கப்படும் காட்சியிலிருந்து துவங்குகிறது. இதுவே இந்த படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.படத்தி நீளமாக இழுக்காமல் இரண்டு மணி நேரம் ஏழு நிமிடத்தில் படம் இருப்பது கூட ஒரு பிளஸ் பாயிண்ட் தான். வெற்றி மாறன் இப்படத்திற்கு சில ஆலேசனைகள் வழங்கியதாக சொல்லப்பட்டது. படத்தில் வரும் டார்க் ஹுமயூர் ஒர்க் அவுட் ஆனதை பார்த்தால் வெற்றி மாறனின் பங்களிப்பு இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது.
மொத்ததில் இந்த மாஸ்க் ஒரு நல்ல திரை அனுபவம்.



