இயக்குனர் – கீர்த்தீஸ்வரன்
நடிகர்கள் – பிரதீப் ரங்கநாதன், மம்தா பாய்ஜு, சரத்குமார்
இசை – சாய் அபயங்கர்
தயாரிப்பு – மைத்ரி மூவி மேக்கர்ஸ்
ஒரு அமைச்சர் தன் மகளை பாசமாக வளர்த்து வருகிறார், அவருக்கு ஒரு தங்கை மகன் உள்ளான், ஆனால் அந்த தங்கையும் தங்கை மகனும் சாதாரண வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள், இந்நிலையில் நாயகனை காதலித்து வரும் அந்த பெண் அவனிடம் தெரிவித்து விட அவன் மறுத்து விடுகிறான், பின் அவள் இல்லாமல் வாடி அவளை காதலிப்பதாக மாமாவிடம் சொல்கிறான், கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர், திடீர் திருப்பமாக அவள் இன்னொருவனை காதலித்து வருவதாக சொல்கிறார், இதன் பின் தான் விரும்பிய முறை பெண்ணை அவள் ஆசை பட்டவனுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான் இதன் பின் என்ன ஆனது என்பதே இந்த படத்தின் கதை.
தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் மீண்டும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார், தனக்கே உரித்த பாவனைகளில் சிறப்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார், இந்தப் படம் நாயகனுக்கு எவ்வளவு முக்கியதுவம் இருக்கிறதோ அதே அளவுக்கு நாயகிக்கும் முக்கியதுவம் உள்ளது, மம்தா பாய்ஜு சிறப்பாக நடித்துள்ளார்,
சரத்குமார், டிராவிட் செல்வம், ரோகிணின்னு ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
சாய் அபயங்கரோட இசை ஒரு அற்புதமான அறிமுகப் படமா இருக்கும். தேவைப்படும் போதெல்லாம் அவரோட இசை படத்தைத் தூக்கி நிறுத்துதுன்னு பாராட்டியிருக்காங்க.
படம் ரோம்-காம் ஜானர்ல இருக்கு படம் கொஞ்சம் ஸ்லோவா தான் ஸ்டார்ட் ஆகுது. “இன்டெர்வெல் பிளாக் எதிர்பாரா ட்விஸ்ட் உடன் இருக்கு. இரண்டாம் பாதி கொஞ்சம் போர் அடித்தது ஆனால் கிளைமாக்ஸ்ல ட்விஸ்டுகளோட நிறைவடைந்தாலும், திரைக்கதை இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருக்கலாம்,
“மொத்தத்தில் ‘டியூட்’ ரொமான்டி காமெடி ஜானர் பிடித்தவர்கள் கண்டிப்பாக மிஸ் பண்ண கூடாத படம்.



