பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

0

சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் (FIAPF) அங்கீகரிக்கப்பட்ட ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவாக வகைப்படுத்தப்பட்ட எஸ்டோனியாவில் நடைபெறும் தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா, அதன் 29வது பதிப்பை எஸ்டோனியாவின் தாலினில் நிறைவு செய்தது.

இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமான முதல் சிறப்புப் போட்டி நடுவர் குழுவில் பணியாற்ற பிளாக்பஸ்டர் ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம் நியமிக்கப்பட்டார். இளங்கோ ராமின் திரைப்படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) 2023 ஆம் ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு சிறப்பு நடுவர் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போட்டிப் பிரிவில் நடுவர் குழு உறுப்பினராக 2025 இல் அவர் நியமிக்கப்பட்டிருப்பது கெளரவமாகும்.

இந்த ஆண்டு தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழு 9 முக்கிய விருது பிரிவுகளில் முடிவுகளை அறிவித்தது.

FIAPF ஆல் ஏ- லிஸ்ட் திரைப்பட விழாவாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் பணியாற்றும் முதல் இலங்கையர் என்ற பெருமையையும் இளங்கோ ராம் பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சிமிக்க தருணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here