யெல்லோ- விமர்சனம்

0

இயக்குனர் – ஹரி மகாதேவன்
நடிகர்கள் – வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, டெல்லி கணேஷ்
இசை – கிளிஃபி கிரிஸ்
தயாரிப்பு – பிரசாந்த் ரங்கசாமி

காதலித்த காதலனோடு கடைசி வரைக்கும் ஒன்றாக இருப்போம் என்கிற எண்ணத்தில் ஒரு பெண் காதலித்து வருகிறார், ஆனால் எதிர்பாராத விதமாக அவளின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, குடும்ப சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி சில முடிவுகளை எடுக்குறாங்க, வீடு வேலைன்னு வாழ்க்கையில எந்த விதமான சுவாரசியமும் இல்லாம இயந்திரத்தனமாக நாட்களை கடத்திக்கிட்டு போறாங்க, அவருடைய அப்பா ஓரளவுக்கு குணமாகி வர, கடைசி வரைக்கும் கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு போன காதலன் பிரேக்கப் பண்ற எண்ணத்தோடு மீட் பண்றாரு. அதோட வேற ஒரு பெண்ணையும் திருமணம் செஞ்சுக்க போறாருன்னு தெரிய வருது, அதனால மனமுடைந்து போன அந்தப் பெண் அவளின் அப்பாவிடம் பேசும் போது சில தெளிவுகள் கிடைக்குது, முக்கியமா இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்காக சின்ன வயசுல, சொந்த ஊர்ல ஒன்றாக வளர்ந்த ஃப்ரண்டை தேடி கேரளாவுக்கு போறாங்க. அவங்கள தேடி கண்டுபிடிச்சு சந்திச்சாங்களா? இல்லையா ?என்பது தான் ‘யெல்லோ’ படத்துடைய மீதி கதை.

பூர்ணிமா ரவி படத்துக்கு கதாநாயகியாக மட்டுமில்லாமல் ஆதிரை கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தக்கூடிய நடிகையாக தன்னுடைய பக்குவமான நடிப்பு அழகாக வெளிப்படுத்தி இருக்காங்க, பல நேரங்களில் இருக்கும் குழப்பங்கள், அதை கடக்க பெரும் தெளிவிலிருந்து கிடைக்கும் சந்தோஷங்கள் என பல்வேறு விதமான நடிப்பை ஒருங்கே சேர்த்து கொடுத்து எல்லோ படத்துக்கு வலு சேர்த்து இருக்காங்க.

படத்துக்கு கதாநாயகனாக ஆதிரை கதாபாத்திரத்திற்கு பக்க பலமாய் வரும் சாய் என்னும் கதாபாத்திரத்தில் வைபவ் முருகேசன் அர்த்தமுள்ள பல வசனங்களை தன் நடிப்பின் மூலமா வெகு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.இவருடைய கதாபாத்திரமும் அதை அவர் வெளிப்படுத்து உள்ள விதமும் நன்கு உள்ளது. பூர்ணிமா ரவியின் அப்பாவாக நடித்துள்ள டெல்லி கணேஷ் தனது அனுபவ நடிப்பினை சிறப்பாக வெளிப்படி த்தியு ள்ளார்,மற்றும் மணி அண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் பிரபு சாலமன் ,லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன் போன்றோரின் நடிப்பும் குறைவின்றி உள்ளது

இயற்கை மிளிரும் காட்சிகளை கண்களுக்கு இனிமை தரும் வகையில் , ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக்.,பாடல்களை பொருத்தமட்டில் கிளிஃபி கிரிஸ் இசையில் ரசிக்கும்படி உள்ளன ,அதேபோல . ஆனந்த் காசிநாத்தின் , பின்னணி இசையும் கதையோடு பயணித்து, காட்சிகளுக்கு சரியான பின்புலத்தை கொடுத்துள்ளது.

எடுத்துக்கொண்ட கதைக்கு தெளிவான திரைக்கதை காட்சிகளை அமைத்து, நல்ல தொழில் நுட்ப கூட்டணியுடன், நிறைவான பயணவழி கதையினை படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி மகாதேவன் .பயண கதையை படமாக எடுப்பதில் பல முக்கியமான விஷயங்களை சரியாக செய்தால் மட்டுமே அந்த படம் சிறப்பானதாக அமையும். இந்தப் படத்தை இயக்கியது அறிமுக இயக்குனராக என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தொழில்நுட்ப கலைஞர்களோடும், சிறந்த நடிகர்களின் நடிப்போடும், திரைக்கதையை நகர்த்தியுள்ளார்.

மொத்ததில் ‘யெல்லோ’’ உணர்வுகளை தேடிச்செலும் ஒரு பயணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here