இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

0

நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை!

ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, “முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். ‘அன்பு மட்டும் அண்டம் தேடும் ‘ என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. ‘மெல்லிசை’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு ‘மெல்லிசை’ படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை ‘மெல்லிசை’ பேசுகிறது.

நடிகர்கள்: ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா, புரோக்டிவ் பிரபாகர் மற்றும் கண்ணன் பாரதி.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களான ஹேஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தற்போது தயாரித்துள்ள ‘மெல்லிசை’ அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ‘ அன்பு மட்டும் அண்டம் தேடும் ‘ என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here