கண்ணன் ரவி குரூப், கண்ணன் ரவி  தயாரிப்பில் தீபக் ரவி இணை தயாரிப்பில், ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”

0

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரித்து வழங்க, இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன்  காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக “தலைவர் தம்பி தலைமையில்” உருவாகியுள்ளது.

இப்படத்தில்  ஜீவா நாயகனாக நடிக்க தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் பல வெற்றிப்படங்களை தந்து வரும் கண்ணன் ரவி குரூப் நிறுவனம் சார்பில் கண்ணன் ரவி இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும்  இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

தொழில் நுட்பக்குழு விவரம்
இயக்குநர் – நிதிஷ் சஹதேவ்
தயாரிப்பு நிறுவனம் – கே ஆர் குரூப்
தயாரிப்பாளர் – கண்ணன் ரவி
இணை தயாரிப்பு – தீபக் ரவி
எழுத்தாளர்கள் – சஞ்ஜோ ஜோசப், நிதிஷ் சஹதேவ், அனுராஜ் O B
இணை தயாரிப்பாளர் – முத்துகுமார் ராமநாதன்
ஒளிப்பதிவாளர் – பப்லு அஜு
படத் தொகுப்பாளர் – அர்ஜுன் பாபு
இசை – விஷ்ணு விஜய்
கிரியேட்டிவ் டைரக்டர் – லிபின் உண்ணி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – சுனில் குமாரன்
கூடுதல் வசனம் – விஜயகுமார் சோலைமுத்து
முதன்மை துணை இயக்குநர் – ரித்விக் லிமா ராமதாஸ்
ஒலி வடிவமைப்பு – சங்கரன் A.S – K.C. சித்தார்த்தன்
ஒலி தொகுப்பு (Final Mix) – விஷ்ணு சுஜாத்தன்
VFX – ஃபோகஸ் VFX
ஆடை வடிவமைப்பாளர் – ரித்தேஷ் செல்வராஜ் ஒப்பனை கலைஞர் – விக்ரம் ஆதித்தன்
சண்டை பயிற்சி – பிரபு ஜாக்கி
துணை இயக்குநர்கள் – விஜயகுமார் சோலைமுத்து, மெல்பின் மெத்யூ தாமஸ், பா கார்த்திக்
உதவி இயக்குநர்கள் – துளசி சுந்தர், பிரவின் சுப்ரமணியன்
புகைப்படம் – நவீன் பிலிக்ஸ்
விளம்பர வடிவமைப்பு – எல்லோ டூத்ஸ்
வசன ஒலிப்பதிவு ஸ்டுடியோ – LML ஸ்டுடியோ
வசன ஒலிப்பதிவு – K. ஜெகன்
மக்கள் தொடர்பு (PRO) – சதீஷ் குமார் S2 Media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here