சென்னையில் ECON 2025 – இந்தியாவின் முதன்மையான கால்-கை வலிப்பு மாநாடு

0

சென்னை, ஆகஸ்ட் 2025 – இந்திய கால்-கை வலிப்பு சங்கம் (IES – Indian Epilepsy Society) மற்றும் இந்திய கால்-கை வலிப்பு சங்கம் (IEA – Indian Epilepsy Association), ECON 2025 இன் ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து, ECON 2025 இன் வருடாந்திர கருத்தரங்கின் தொடக்கத்தைப் பெருமையுடன் அறிவிக்கிறது. இக்கருத்தரங்கு, சென்னை லீலா பேலஸில், ஆகஸ்ட் 21 முதல் 24 வரை நிகழவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னணி நரம்பியல் நிபுணர்கள், வலிப்பு நோய் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை தொடர்புடைய மருத்துவ நிபுணர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, கால்-கை வலிப்பு நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கருத்தரங்கின் தொடக்க விழா ஆகஸ்ட் 22, 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்குச் சென்னை லீலா பேலஸில் உள்ள கிராண்ட் பால்ரூமில் நடைபெறும். மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் ஸ்ரீ கோபாலகிருஷ்ண காந்தி, இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

துவக்க விழாவின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

• கடவுள் வாழ்த்து & விளக்கேற்றுதல்
• ECON 2025 இன் ஏற்பாட்டுத் தலைவர் மருத்துவர் வி. நடராஜனின் வரவேற்பு உரை
• IES & IEA இன் பொதுச் செயலாளர்களின் அறிக்கைகள்
• டாக்டர் P. சரத் சந்திரா (IES தலைவர்) மற்றும் டாக்டர் P. சதீஷ்சந்திரா (IEA தலைவர்) ஆகியோரின் தலைமை உரைகள்
• IES & IEA தலைவர்களைக் கௌரவித்தல்
• அதிகாரப்பூர்வ நினைவுப் பரிசு மற்றும் புத்தகங்களின் வெளியீடு
• முதன்மை விருந்தினரின் தொடக்க உரை
• ECON 2025 அமைப்பின் செயலாளர் மருத்துவர் K. மால்கம் ஜெயராஜ் அவர்களின் நன்றியுரை

ECON 2025 இன் அறிவியல் நிகழ்ச்சியில், மருத்துவ பராமரிப்பு, அறுவை சிகிச்சை, மரபியல் மற்றும் கால்-கை வலிப்புக்கான பொது சுகாதார முயற்சிகளில் புதுமைகளை மையமாகக் கொண்ட முழுமையான அமர்வுகள், கருத்தரங்குகள், இடைவினை பட்டறைகள் (interactive workshops), நேர்வு ஆய்வு விவாதங்கள் (case discussions) மற்றும் கால்-கை வலிப்பு வினாடி வினா ஆகியவை இடம்பெறும்.

இக்கருத்தரங்கைப் பற்றிப் பேசிய ECON 2025 இன் அமைப்புச் செயலாளர் டாக்டர் K. மால்கம் ஜெயராஜ், “சென்னையில் ECON 2025-ஐ நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கருத்தரங்கு அறிவியல் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக மட்டுமல்லாமல், இந்தியாவில் கால்-கை வலிப்பு சிகிச்சை மற்றும் பராமரிப்பை வலுப்படுத்துவதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒரு படி முன்னெடுத்துச் செல்லும் களமாக அமைகிறது” என்றார்.

ECON 2025 கருத்தரங்கு, நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, நரம்பியல் மற்றும் கால்-கை வலிப்பு சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு: www.econ2025.com

வழங்குபவர்:
ஏற்பாட்டுக் குழு, ECON 2025

Media Relations
R. S. Prakash
Pentagan PR
9841099945
9941099945

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here