திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் IDENTITY!

0
154

ARM படத்திற்கு பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடித்துள்ள IDENTITY திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டோவினோ தாமஸ், த்ரிஷா இணைந்து நடித்துள்ள IDENTITY திரைப்படம் இந்த வாரம் ஜனவரி 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானாலும், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளை தாண்டி அடுத்தடுத்த நாட்களில் திரையரங்கிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

IDENTITY திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் ரசிகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நடிப்பு, இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு நன்றாக இருப்பதாக அனைவரும் தெரிவித்து வருகின்றனர். ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் மூலம் இப்படம் தயாராகி உள்ளது. IDENTITY தென்னிந்திய சூப்பர் ஸ்டார் த்ரிஷாவின் முதல் மலையாளத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். IDENTITY படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது, மேலும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரின் கீழ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு, அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு மற்றும் சமன் சாக்கோவின் படத்தொகுப்பு, ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளனர். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here