Zebra Movie Review

Zebra Movie Review

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களை ஒன்றினைத்து பான் இந்திய முயற்சியாக வந்திருக்கும் படம் ஜீப்ரா.

 

 

தனியார் வங்கியில் வேலை பார்க்கும் நாயகன் சத்ய தேவ் மற்றோரு வங்கியில் வேலை பார்க்கும் நாயகி ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலிக்கிறார்.

 

ஒரு  நாள்  நாயகி பிரியா ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு  லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக அனுப்பி விடுகிறார். இதனால் பிரியா  பெரிய சிக்கல் ஏற்படுகிறது

 

இதனையடுத்து  நாயகியை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் சத்யதேவ். சில தில்லுமுல்லு வேலைகளை செய்து நாயகியை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறார்.

 

இதே சமயம் பிரபல தாதாவாக இருக்கும் டாலி தனஞ்செயாவிற்கு சேர வேண்டிய ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மோசடி செய்ய விடுகிறார்கள்.

 

அந்த 5 கோடி ரூபாயால் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சத்ய தேவ், அதில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே  ’ஜீப்ரா’  படத்தின் மீதிக்கதை.

 

நாயகனான நடித்திருக்கும் சத்ய தேவ் எதார்த்த  நடிப்பை  கொடுத்திருக்கிறார். காதலியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் அம்மாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் வில்லனிடம் மாட்டி தவிப்பது என சிறப்பாக செய்திருக்கிறார். நாயகனுக்கு உதவி செய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ்

 

வில்லனான வரும் டாலி தனஞ்செயா தான் வில்லன் அல்ல தானும் ஒரு நாயகன் என சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு இருக்கிறது. நாயகியாக வரும் ப்ரியா பவானி சங்கர்  கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

 

வில்லனாக வரும் சுனில் வர்மா, ஜெனிபர், சுரேஷ் மேனன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் காட்சிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்.

 

வங்கிகளில் நடக்கும் மோசடிகளை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக்,  ஒரு வங்கியின் செயல்முறை குறித்தும் வங்கியில் உள்ள நிதி ஆதாரங்களுக்கான பாதுகாப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு அட்டகாசமான திரில்லர் டிராமா கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து.

 

 

நடிகர்கள்: சத்ய தேவ், டாலி தனஞ்செயா, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ்

 

இசை: ரவி பஸ்ரூர்

 

இயக்கம்: ஈஸ்வர் கார்த்திக்

 

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *