Emakku Thozhil Romance Movie Review

Emakku Thozhil Romance Movie Review

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக காதல் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தது இப்போது அது சுத்தமாக மறைந்து விட்டது அந்தக்குறையை போக்க வந்ந்திருக்கிறது இப்படம்.

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் வந்திருக்கிறது ’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.

சென்னையில் இயக்குனர் பாலாஜி பரணீதரனிடம்  உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அசோக் செல்வன் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார்.தனியார் மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் அவந்திகா மிஸ்ராவைப் பார்த்து காதலில் விழுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில்  அசோக் செல்வனின் தோழி மதுமிலா கருக்கலைப்பு செய்வதற்காக தன்னுடன் கணவனாக நடிக்கும்படி கேட்கிறார் அசோக் செல்வன் நான்தான் கணவன் என பொய் கூறி அந்த கருவை கலைப்பதற்கு உதவி செய்கிறார்.

இந்த விஷயம் காதலியான அவந்திகா மிஷ்ராவுக்கு தெரியா வருகிறது. இதனால் கோபமடையம்  அவந்திகா, அசோக் செல்வனை விட்டு பிரிந்து விடுகிறார்.  இறுதியில்  பிரிந்த காதல் ஜோடியான  அசோக் செல்வன், – அவந்திகா மிஸ்ரா இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ’எமக்குத் தொழில் ரொமான்ஸ்’  படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக வரும் அசோக் செல்வன்  துருதுருவென இருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்.  நண்பர்களுடன் அரட்டை, காதலியிடம் சிக்கி தவிப்பது, அவரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பது என்று இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும்  அவந்திகா மிஸ்ரா, காதல், கவர்ச்சி மற்றும் முத்தக்காட்சிகளில்  நாயகனுக்கு ஈடுகொடுத்து  நடித்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, அப்பா  வேடத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், மாமாவாக நடித்திருக்கும் படவா கோபி, டாக்டராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர்  இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்கள்.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல் மற்றும்  பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு காட்சிகள் கலர்புல்லாக உள்ளது.

நிறைய படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும் அதை அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன் படத்தை காதல்,காமெடி,குடும்பம், ரொமன்ஸ்  என அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் நண்றாக சிரித்து ரசித்து விட்டு வரலாம்.

நடிகர்கள் : அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர்

இசை : நிவாஸ் கே.பிரசன்னா

இயக்கம் : பாலாஜி கேசவன்

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *