Pani Movie Review

Pani Movie Review

கேரளா சினிமாவின் மிகப்பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாயிருக்கும் படம் பணி.

 

கொரிய சினிமாவின் தாக்கத்தில் அசத்தலான டார்க் கமர்ஷியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

 

கேரளா மாநிலம், திருச்சூரில் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வரும் சாகர் சூர்யா & ஜுனைஸ் இருவரும் வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு வெளியே சென்றவர்கள் பணத்திற்காக ஒருவரை கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள் .

 

போலீஸ் இந்த கொலைக்கு யார்? காரணம் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே ஊரில் மங்கலத்’ குடும்பத்தைச் சேர்ந்த ஜோஜூ ஜார்ஜ் , நண்பர்கள் மற்றும்  தங்கை குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

 

ஒருநாள் தனது  தங்கை பிறந்தநாளுக்காக பரிசு பொருள் வாங்க நினைக்கும் ஜோஜூ ஜார்ஜ் தனது மனைவி அபிநயாவை அழைத்து கொண்டு  சூப்பர் மார்கெட்டிற்கு  செல்கிறார். அங்கு வரும்  சாகர் சூர்யா & ஜுனைஸ் இருவரும்  அபிநயாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க இதனை அறியும்  ஜோஜூ ஜார்ஜ் இருவரையும் அடித்து விரட்டி அனுப்புகிறார்.

 

இதனையடுத்து சாகர் சூர்யா & ஜுனைஸ் இருவரும் ஜோஜூ ஜார்ஜின் நண்பனை கொலை செய்து விடுகிறார்கள். அடுத்து ஜோஜூ ஜார்ஜ்  அம்மாவை கொலை செய்ய நினைக்கிறார்கள். இறுதியில் ஜோஜூ ஜார்ஜ் கொலைகாரர்களான சாகர் சூர்யா & ஜுனைஸ் இருவருக்கும் கொடுத்த தண்டனை என்ன? என்பதே ’பணி’  படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக ஜோஜூ ஜார்ஜ் தனக்கே உரித்தான நடிப்பை கொடுத்திருக்கிறார் மனைவி மீது காட்டும் காதல், குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை, நட்பிற்கு கொடுக்கும் முக்கியத்தும் என அனைத்தையும் சரி விகிதமாக கொடுத்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.வில்லன்களாக வரும் சாகர் சூர்யா & ஜுனைஸ் இருவரும் போட்டி போட்டு கொண்டு மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

 

ஜோஜூ ஜார்ஜ் மனைவியாக வரும் நாயகி அபிநயா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். ஜோஜூ ஜார்ஜ்  அம்மாவாக வரும் சீமா , நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

 

விஷ்ணு விஜய் – சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் உள்ளது. வேணு, ஜிண்டோ ஜார்ஜ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

 

கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்  வீட்டில முடங்கிவிடாமல் அதை  எப்படி எதிர்கொள்ள வேண்டும் சொல்லியிருக்கிறார்.

 

ஒரு ஆக்சன் கமர்ஷியல் சினிமாவை எப்படி அழுத்தமான டிராமாவாக சொல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வந்துள்ளது இப்படம்

 

நடிகர்கள் : : ஜோஜூ ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, சீமா, ப்ரஷாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர்,

 

இசை : விஷ்ணு விஜய், சாம் சி எஸ்

 

இயக்கம் : ஜோஜூ ஜார்ஜ்

 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *