Parari Movie Review

Parari Movie Review

தமிழில் நல்ல இயக்குநர் என பெயர் வாங்கியிருக்கும் இயக்குநர் ராஜு முருகன் வழங்க, அவரது உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்ததில் வந்துள்ள படம் பராரி.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  அருகே உள்ள  கிராமத்தில்  சாலைக்கு ஒரு புறத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் நாயகன் ஹரி சங்கர் மறுபுறம் வேறு சமூகத்தை சேர்ந்த நாயகி சங்கீதாவும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதே கிராமத்தில் இருவரும் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே நாயகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார் நாயகி சங்கீதா  இதே ஊரில் பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டை, தண்ணீர் தொட்டி பிரச்சனை இரு ஊருக்கும் நடந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் ஜூஸ் நிறுவனத்திற்கு  இரு சாதியினை சேர்ந்த  மக்களும் 3 மாத வேலைக்காக செல்கின்றனர். இதே சமயம் ஹீரோ ஹரி சங்கரை மற்றொரு வகுப்பைச் சேர்ந்த ப்ரேம்நாத் கர்நாடகாவில் உள்ள ஜூஸ் பேக்டரியில் வைத்து தீர்த்து கட்ட நினைக்கிறார்.

இதே  பேக்டரியில் கன்னட வெறியர்கள் சிலர் பணிபுரிகின்றனர். ஒரு சமயம் நாயகியிடம் தவறாக நடக்க நினைக்கையில் நாயகன் அதை தட்டி கேட்கிறார். இதனால் கன்னட வெறியர்களுக்கும்  நாயகனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நாயகியை கொலை செய்ய  முயற்சி செய்கிறார்கள். இறுதியில் நாயகன் ஹரி சங்கர்  கன்னட வெறியர்களிடம் இருந்து  நாயகி சங்கீதாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’பராரி’

மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகன் ஹரி சங்கர் இயல்பான நடிப்பின் மோளம் கவனம் பெறுகிறார். எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவது  அனைவரையும் ஒன்றாக பார்ப்பது என் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்த சங்கீதா கல்யாணின் நடிப்பு பாராட்டுக்குரியது நாயகனை உருகி உருகி காதலிப்பது பட்த்தின் அதிலும் இறுதிக்காட்சில்  ஹரி சங்கர் மற்றும் சங்கீதாவின் நடிப்பு அனைவரின் கண்களில் நீரை வரவழைத்து விடுகிறது.

கன்னட வெறியனாக நடித்திருக்கும் மகேந்திரன் ஆக்ரோஷமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஊர் தலைவர்களாக நடித்தவர்கள், ஹீரோவின் அப்பா, ஹீரோயின் அப்பா, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என படத்தில் நடித்த அனைவரின் நடிப்பு கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறது.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் mஏலாதி ரகம்,. பின்னணி இசை கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் எழில் பெரியவேடி சமூகத்தில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

சமூகத்தில் நிலவும் கசடுகளை தொடர்ந்து பேச வேண்டும் அந்த வகையில் இது தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பு.

நடிகர்கள் ; ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத்

இசை : ஷான் ரோல்டன்

இயக்கம் : எழில் பெரியவேடி

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *