கல்வித்துறை அமைச்சரிடம் பாராட்டு வாங்கிய மாணவி நஸ்ரீன் கலந்துகொள்ளும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!
இதோ வந்துவிட்டது மழலைக் குரல்களின் இசை சங்கமம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை கோலாகலமாகத் துவங்குகிறது. முற்றிலும் எதிர்பாராத வகையிலான போட்டியாளர்கள், நடுவராக நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் என, ஆரம்பமே களை கட்டுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த புரமோ, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் வெற்றிகரமான 10 வது சீசன் தற்போது கோலாகலமாகத் துவங்கவுள்ளது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் வகையில், இந்த முறை பல்வேறு தளங்களில், மாறுபட்ட பின்னணியிலிருந்து திறமையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நடுவராக பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் அவர்களும் பங்குகொள்ளவுள்ளார்.
சமீபத்திய புரோமோ ராணிப்பேட்டையைச் சேர்ந்த போட்டியாளர் நஸ்ரீனை அறிமுகப்படுத்தியது. இந்த இளம் போட்டியாளர் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தனித்திறன்களை வெளிப்படுத்தி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் விருது வாங்கி அசத்தியுள்ளார்.
பல தளங்களில் சிறந்து விளங்கும், திறமைமிக்க போட்டியாளர்கள் இந்த முறை கலந்துகொள்வது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. கடந்த முறை கலந்துகொண்ட பல போட்டியாளர்களுக்கு திரை வாய்ப்புகள் கிடைத்தது, அந்த வகையில் எந்தெந்த போட்டியாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது என்பது விரைவில் தெரியும். திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வப்புகளைக் குவித்துத் தரும், புகலிடமாகவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது.
அனைவரும் எதிர்பார்க்கும் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 10 நிகழ்ச்சி வரும் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கோலாகலமாகத் துவங்குகிறது. இந்நிகழ்ச்சியை உங்கள் விஜய் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.