பக்கவாத விழிப்புணர்வை (Stroke Awareness) அதிகரிக்க முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடன் கை கோர்த்த சிம்ஸ் மருத்துவமனை!
சென்னை – அக்டோபர் 29.2024 . சிம்ஸ் மருத்துமனை வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப நோய்களை தடுக்க பல்வேறு ஆரோக்கிய செயல்முறைகளை விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுத்து வருவதை அறிவோம். அந்த வகையில் பக்கவாத விழிப்புணர்வு தினத்தை கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பக்கவாத பாதிப்புக்கு பிறகு உயிர் பிழைத்தவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் 20 கார்ப்பரேட் குழுவின் பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட தனிநபர்களை குழுவாக இணைத்து பக்கவாத விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.