டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, ‘பைரவனா கோனி பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.

டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட்டது.

படத்தைப் பற்றி டாக்டர் சிவ ராஜ்குமார் பேசுகையில், ” நீண்ட நாட்களாக பேசப்படும் படம் இது. அப்பா ஜி கடந்த காலங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறியப்பட்டவர். மேலும் அதன் மீது மிகுந்த அன்பையும் பெற்றார். ‘பைரவா’ வாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு கதையும் எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் பேசுகையில், ” பைரவனா கோனே பாதா’ ஒரு வகையில் என்னுடைய இலட்சிய படைப்பாகும்.‌ இந்த அளவில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், நான் ரசிக்கும் படி வளர்ந்த.. ஒரு சூப்பர் ஸ்டாரை இயக்குவதும் பத்து மடங்கு சவாலானதாக இருக்கிறது. சிவா அண்ணாவுடன் பணிபுரிய வேண்டும் என ஒவ்வொரு இயக்குநரும் விரும்புவார்கள். வேலையின் மீதான அவரது வைராக்கியம் தீவிரமானது. ஒரு நாள் முழுவதும் மலை உச்சியில் போட்டோ சூட் நடந்தது. வானிலை நமக்கு சாதமாக இல்லாவிட்டாலும்… சிவராஜ் குமார் சார் படப்பிடிப்பில் ஒத்துழைப்பு வழங்கிய விதம் ஒட்டுமொத்த குழுவும் வியப்பில் ஆழ்ந்தது.

இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட.. ஒரு நவீன போர் பற்றிய படமாக இருக்கும். ‘பைரவனா கோனே பாதா’வில் நான் உருவாக்குவது ஒரு புதிய அனுபவம்” என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள தயாரிப்பாளர் வைஷாக் ஜெ. கௌடா பேசுகையில், ” பைரவனா கோனே பாதா’வின் கதையைக் கேட்டவுடன் இது மிகவும் சிறப்பான படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. அரங்கங்கள், படபிடிப்பு தளங்கள்… என அனைத்தும் விரிவாக திட்டமிடப்பட்டு நேர்த்தியாக செயல்படுத்தப்படும். நாங்கள் அமைக்கும் உலகத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மேலும் அது அந்த காலத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த படங்களுக்கு இணையாக இருக்கும்” என்றார்.

‘பைரவனா கோனே பாதா’ படத்தில் நடிக்கும் ஏனைய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *