துபாய் வானில் உயரப் பறக்கும் இந்தியன் 2 போஸ்டர்! லைகாவின் பிரமாண்டம்!

துபாய் வானில் உயரப் பறக்கும் இந்தியன் 2 போஸ்டர்! லைகாவின் பிரமாண்டம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பெருமைமிகு படைப்பாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

வரும் ஜூலை 12-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை உலகம் முழுக்க பறந்து பிரமோஷன் செய்து வருகிறார்கள் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினர்.

இந்த பிரமோஷனுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல துபாயில் லைகா செய்திருக்கும் பிரமோஷன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது துபாய் ஸ்கைஸ் என்ற வானில் பறந்து சாகசம் செய்யும் பாரசூட் வீரர்கள் இந்தியன் 2 படத்தின் பேனரை நடுவானில் வெளியிட்டு பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *