‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியீடு!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘VJS 51’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியீடு!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘VJS 51’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs  என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியா நாட்டில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. மேலும் மலேசியாவில் இதுவரை படபிடிப்பு நடைபெறாத பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால்.. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *