கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

0


கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான ‘வெள்ளக்கார துரை’ எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான ‘இங்க நான் தான் கிங்கு’ படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த காலத்தில் ஒரு படத்திற்கு உயிர் கொடுக்கும் தயாரிப்பாளர் இன்னொரு கடவுள். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவருக்கும் என் நன்றிகள். அடுத்ததாக இப்படம் முழுமை பெற மிகமுக்கிய காரணமான, எனக்கு வழிகாட்டியாக இருந்த சந்தானம் சாருக்கு நன்றி. என் இயக்குநர் ஆனந்த் சார், எங்களுக்குள் எப்போதும் ஊடல்கள் இருக்கும். என் கதையை முழுமையான சினிமாவாக மாற்றியுள்ள அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார் அருமையாக வேலை பார்த்துள்ளார் அவருக்கும் என் நன்றிகள். பாடலில் பட்டையை கிளப்பியுள்ள இமான் சாருக்கு என் நன்றிகள். அழகான தமிழ் பேசும் ஹீரோயினுக்கு வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும். படத்தின் நிறை குறைகளை கூறி ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.  

சரிகமா நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசியதாவது….

கோபுரம் பிலிம்ஸ் உடன் சரிகமாவின் முதல் படம் இது. அன்புசெழியன் சாருக்கு நன்றி. இந்த சம்மருக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படம் இருக்கும். சந்தானம் சார் கேங் கலக்கியிருக்கிறார்கள். நல்ல பாடல்கள் தந்துள்ள இமானுக்கு நன்றி.  இந்தப்படம் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும்.  அனைவருக்கும் நன்றி.

நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…

இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிக சந்தோஷப்படுகிறேன் எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். இதற்கு முன் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்தேன், என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். மிகச்சிறந்த தயாரிப்பாளர். சந்தானம் சாரை புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அவர் உங்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என சொல்கிறார்கள் ஆனால் என் வாழ்க்கைக்கே அவர் தான் அதிகம் வாய்ப்பு தந்துள்ளார். இந்தப்படத்திற்கும் அவர் தான் வாய்ப்பு வாங்கி தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இப்படத்தில் இமான் சார் நல்ல பாடல்கள் தந்துள்ளார். என்னை தியேட்டருக்கு வராதே என பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இந்தக்காலத்தில் நேரடியாக சென்று விளம்பரம் செய்தால் தான் படத்திற்கு கூட்டம் வரும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். ‘இங்க நான் தான் கிங்கு’ மிகப்பெரிய வெற்றியடையும்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் பேசியதாவது…

இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் மூவி. அத்றகேற்றாற் போல கேமரா செய்துள்ளேன். நான் சந்தானம் சாரின் ரசிகன். அவரின் நடிப்பை ஷூட்டிங்கில் பார்த்து சிரித்து விடுவேன். இந்த படத்தில் வாய்ப்பு தந்த அன்பு சாருக்கு நன்றி. சந்தானம் மற்றும் இயக்குநருக்கு நன்றிகள்.

இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது…

இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே  ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்.  சந்தானம் சாரை ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார்.  எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள்.  தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் செல்லா அய்யாவு பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த ‘வெள்ளக்கார துரை’ படத்தில், நான் அஸிஸ்டெண்ட். தயாரிப்பாளர் அன்பு சார் சினிமாவை எவ்வளவு நேசிப்பார் என்பது தெரியும். ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப்பற்றி நிறைய பேசுவார். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். கொஞ்ச காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார் வருடத்திற்கு நாலைந்து படங்கள் செய்ய வேண்டும். இந்தப்படம் நான் பார்த்துவிட்டேன். சந்தானம் சார் ரசிகன் நான். இந்தப்படத்தில் எல்லோரும் சிரித்து கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து விரைவில் படம் செய்வேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள்.

தம்பி ராமையா பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறது. மலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான். முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும். அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே. இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம்.  நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வெண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம். லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகை பிரியாலயா பேசியதாவது…

இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக்கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும்  என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

இசையமைப்பாளர் இமான்  பேசியதாவது…

கோபுரம் பிலிம்ஸில் ‘வெள்ளக்கார துரை’ படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார்.  அவருக்கு என் நன்றிகள். இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள்.  சந்தானம் சார் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் ‘மாயோன்…’ பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் சாரும் கலக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள்.  ‘மாயோன்…’ எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சுஷ்மிதா அன்புசெழியன் பேசியதாவது…

என்னை தயாரிப்பாளராக்கிய அப்பாவுக்கு நன்றி. நான் படம் பார்த்து விட்டேன். குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். சந்தானம் சார் கலக்கியிருகிறார். லயா அருமையாக நடித்துள்ளார். ஒரு கலக்கலான விருந்தாக இப்படம் இருக்கும்.

தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது…

சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது.  அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்.  என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

நடிகர் சந்தானம் பேசியதாவது…

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக  இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். ‘கட்டா குஸ்தி’ படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். D. இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன்,
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.

‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

*** 

Press meet highlights of Santhanam-starrer ‘Inga Naan Thaan Kingu’ presented by Gopuram Films G.N. Anbuchezhian and produced by Sushmitha Anbuchezhian on a grand scale

Santhanam-starrer ‘Inga Naan Thaan Kingu’ presented by Gopuram Films G.N. Anbuchezhian, produced by Sushmitha Anbuchezhian and directed by Anand Narayan is all set for grand worldwide theatrical release on May 10. The cast and crew members of this film met and interacted with the press and media fraternity in Chennai Friday, sharing their working experiences on this project.

Here are some of the excerpts from the event…

Writer Ezhichur Aravindan said…

“I am the writer of Anbuchezhian’s maiden production titled ‘Vellakkara Durai’, and I am glad to pen the script for his upcoming production ‘Inga Naan Thaan Kingu’ after 10 years. He accepted to produce the film immediately after listening to the script. My heartiest thanks to each and everyone, who supported me during this journey. Producers are no less than Gods, as they become the major source of energy to make a film. I take this opportunity to thank G.N. Anbuchezhian sir and Sushmitha Anbuchezhian madam for this opportunity. I express my deepest gratitude to Santhanam sir, whose guidance and support were instrumental in the successful completion of this film. Despite our differences, I am thankful to director Anand sir for transforming my story into a compelling movie. Thambi Ramaiah sir’s exceptional performance deserves appreciation, and I extend my thanks to him as well. Special thanks to Imman sir for beautiful music. I congratulate the talented Tamil-speaking heroine Laya. I am confident that this film will be a huge success, and I am grateful to the entire team for their contributions in making it an enjoyable experience for the audience.”

Saregama Anand said…

“Sa Re Ga Ma’s collaboration with Gopuram Films marks a significant milestone. We express our gratitude to Anbuchezhiyan sir for this wonderful opportunity. This movie promises to be an absolute delight, especially during the summer season. Santhanam sir and his talented team have crafted a hilarious and wholesome entertainer. We extend our appreciation to Imman sir for composing fantastic songs. Rest assured, this film will be an extraordinary treat for all moviegoers in the theaters.”

Actor Cool Suresh said…

“I am delighted to be a part of this film, and the producers were very generous in paying me. I previously collaborated with them for ‘Vellakkara Durai’, and they took excellent care of me. Anbuchezhian sir is an exceptional producer. Many people question why I praise Santhanam sir so much though he hasn’t offered me many roles in his movies. However, to be honest, it was Santhanam who provided numerous opportunities for me in my career. He was the one who gave me the chance to be part of this film, and I will always be thankful to him. Imman sir has composed fantastic songs for this movie. Despite some advising me not to engage in theater promotions, the current trend is to promote films in theaters, which significantly contributes to attracting audiences. I am committed to promoting this film to the best of my abilities. I am confident that ‘Inga Naan Thaan Kingu will be a huge success.”

Cinematographer Om Narayan said…

“This is a family entertainer, and I have done the cinematography accordingly. I am a great fan of Santhanam sir. I couldn’t control my laughter for his natural humour since during the shoot. I thank Anbu sir for this opportunity. My thanks to Santhanam and the director too.”

Director Anand Narayan said…

“My heartiest thanks to each and everyone who have been extending their support for this film till now. I approached Anbu sir after getting to know that he has been listening to scripts for producing. I got to meet him through Senthil sir. They immediately agreed to rope me in as the director for this project. They gave me complete freedom and time. After watching the talkie portion of this film, they called me personally and appreciated me. I am a great fan of Santhanam sir and I met him during ‘India Pakistan’ shoot. I am so happy to be working with him finally for this project. He appreciated me on the first day of shooting itself, and both of us would engage in healthy discussions for betterment of scenes during the shoot. Imman sir has given good music for this film. There is a particular emotional scene in this film, where there will be a heavy competition between Santhanam sir’s performance and Imman sir’s BGM. I thank the entire cast and crew for their lovely work. The film is releasing on May 10, and I request you all to watch this movie and support us.”

Director Chella Ayyavu said…

“I was an assistant director in ‘Vellakkaara Durai’ produced by Gopuram Films. I know Anbuchezhian sir’s passion for cinema. Whenever a film becomes a hit, he would keep raving about it. He would always mention that film personalities have a great responsibility. It’s great to see him to resume his film production works. I wish that he continues to produce at least 4-5 films in a year. I have already seen the film, and it’s going to be a special treat for everyone. I will be working with Santhanam sir soon. Thank you all.”

Actor Thambi Ramaiah said, ‘’Inga Naan Thaan Kingu’ is set to be a movie that will be cherished by family audiences. Nowadays, movies have become a popular subject of conversation, with some even suggesting that Malayalam cinema is surpassing us. However, I would like to emphasize that Tamil cinema is the foundation of all industries. In the past, there was a meticulous process involved in crafting a story. From Devar sir  to RB Choudary sir, immense attention was given to the selection and development of the storyline. Similarly, Gopuram Films carefully chooses and produces films. Anbuchezhiyan sir has brought his daughter to this field. She is talented. Congratulations to her. The film is a comedy treat without any obscenity or indecency. Talented artistes have collaborated on it. Imman has composed exceptional songs. The key to Santhanam’s success lies in his kind-hearted nature, as he never fails to provide opportunities and explore the talents of his friends. He ensures that his die-hard fans and the general audience enjoy his movies.Working with him in this film has been a delight. Laya has delivered a flawless performance despite being a newcomer, and she has a promising future ahead. Congratulations to her. I have portrayed a comedy character throughout the film. Thanks to everyone who supported this movie. People should watch the film in theatres on May 10.”

Priyalaya said…

“This is a special day in my life, marking the beginning of my journey. I express my gratitude to God, my parents, and the esteemed producer Anbu sir, as well as Sushmitha madam, for giving me this incredible opportunity. They took excellent care of me throughout the filming process. I consider myself fortunate to make my debut in a movie produced by Gopuram Films. Santhanam sir is adored by all, owing to his genuine ability to bring joy to those around him. He possesses remarkable humility. During the initial schedule, he conversed with me in English, unaware that I am a Tamil, and I later revealed the secret. It is an immense pleasure to work alongside him. Director Anand is cool. Thambi Ramaiah sir’s energy is truly inspiring. I am a great admirer of his Tamil language skills. I extend my gratitude to the entire crew. Music is the heart and soul of this film, and Imman sir has done an exceptional job in this regard.”

Music Director Imman said…

“I had the opportunity to collaborate with Gopuram Films for ‘Vellakkara Durai’, and now I am working with Anbuchezhian sir after a gap. He has shown special fondness towards my music. I express my gratitude to him. I extend my congratulations to Sushmitha. Santhanam sir’s comedy scenes are regularly played in my home. Working with him has been a long-standing desire of mine, and I am thrilled to be a part of this project. The song ‘Maayon…’ has come out very well. Thanks to composer Sean Roldan, who has sung ‘Maayon…’ beautifully. In addition to his comedic prowess, Santhanam has delivered outstanding emotional performances in this film.”

Producer Sushmitha Anbuchezhian said…

“I thank my father for making me the producer of this film. Santhanam sir has done a remarkable job in this movie, and  has exhibited a wonderful performance. This is going to be an enjoyable movie for everyone in the theaters.”

Producer G.N. Anbuchezhian said…

“I had a longtime desire to collaborate with Santhanam sir on a film. After a hiatus from production, I decided to return with this movie. When this script came to me, I felt Santhanam would be the perfect fit for the role. He has been incredibly supportive and dedicated throughout the filming process. Saregama Anand has joined forces with us as a partner for this project. I extend my congratulations to Thambi Ramaiah sir, heroine, Cool Suresh, and the rest of the team for their outstanding work. D Imman sir has composed some fantastic songs for this film. Santhanam has put in a tremendous amount of effort, and I am truly grateful to him. Chella Ayyavu has gone out of the way for this project, working tirelessly. We are already planning to collaborate on another film in the near future. I have many more projects in the pipeline, so I humbly ask for your continued support. Special thanks to Kamal Haasan sir for being the first to endorse us by sharing about this film on his X page. My daughter Sushmitha has made her debut in the film industry through this project, and I kindly request your support for her as well.”

Actor Santhanam said…

“I may be the hero of ‘Inga Naan Thaan Kingu’, but Anbuchezhian sir is truly the king of the Tamil film industry, When I first visited his office seeking financial assistance to buy a house, he generously offered me a substantial money as advance for a movie instead. Anbuchezhian sir is a kind man who always communicates with me in a light-hearted manner. He presented me with this script, and upon reading it, I immediately agreed to be a part of the film. Working with him was a delightful experience. Anbuchezhian sir assured me that the audience would leave the theaters with smiles on their faces, emphasizing that he approached the film as a theater owner rather than a producer. Sushmitha has made her debut as a producer with this movie, and I extend my best wishes to her. Music director Imman has composed unique songs for this film, adding a fresh touch. Director Anand has made the film beautifully. Thambi Ramaiah sir’s intelligence is unmatched, and conversing with him is truly awe-inspiring. Actress Laya, hailing from Salem, delivered an outstanding performance, making me believe she was a Bollywood heroine. The film features my close friends – Maaran, Seshu, Cool Suresh, Manobala, and many others. I express my gratitude to the support of Chella Ayyavu sir, whose previous venture was the successful project ‘Gatta Kusthi’. ‘Inga Naan Thaan Kingu’ portrays the lifestyle of 90s and 2K kids, promising a magical experience for the audience. I request everyone to show their support for this movie.”

‘Inga Naan Thaan Kingu’ is a comedy treat featuring an ensemble star-cast including Thambi Ramaiah, Seshu, Munishkanth, Cool Suresh, Bala Saravanan, Vivek Prasanna, Maaran, Swaminathan, and many others.  Priyalaya plays the female lead opposite Santhanam in this movie. D Imman has composed music for this film, which has story, screenplay and dialogues written by Ezhichur Aravindan. Vignesh Shivan, and Muthamizh have penned lyrics.

Cinematography – Om Narayan, Editing – M. Thiyagarajan, Art – M. Sakthiee Venkatraj, Stunt – Miracle Michael, Choreography – Kalyan-Baba Bhaskar.

The film is directed by Anand Narayan. Presented by Gopuram Films G.N. Anbuchezhian and produced by Sushmitha Anbuchezhian as ‘Inga Naan Thaan Kingu’ is all set for worldwide theatrical release on May 10.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here