பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

0இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில், இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

பிரத்யேக போஸ்டருக்கு கிளிக் செய்யவும்..

https://x.com/vyjayanthifilms/status/1784189849282761177?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

அஸ்வத்தாமாவாக தோன்றும்  அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தின் மூலம்  ‘2898 AD கல்கி’யின் உலகத்தைப் பற்றிய சமீபத்திய பார்வை.. ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக பழம்பெரும் நடிகரின் அற்புதமான இளமையான தோற்றத்துடன் கதாபாத்திரத்தினை வெளிப்படுத்தும் காணொளி… அசலான பான் இந்தியா டீசர் என்பதையும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளின் கலவை என்பதையும் காட்சிப்படுத்துகிறது.

நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 AD’ இந்த ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வாக அமைகிறது. ஆற்றல் வாய்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் மற்றும் வைஜெயந்தி மூவிஸ் ஆதரவுடன் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27 ஆம் தேதியன்று வெளிவரத் தயாராகிறது.

Mark Your Calendars: Prabhas starrer ‘Kalki 2898 AD’ to hit theatres on 27th June 2024


This year’s highly-anticipated sci-fi spectacle, Kalki 2898 AD, is set to win over the audiences worldwide on 27th June, 2024. With the biggest casting coup including the stalwarts of the Indian film industry such as Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone, and Disha Patani in pivotal roles, the film has garnered immense attention and kept fans eagerly awaiting its release.

The announcement, made today, precisely two months ahead of the release date, has only added to the excitement surrounding the project. Taking to social media, the makers unveiled the biggest news which read

https://x.com/vyjayanthifilms/status/1784189849282761177?s=46&t=td36fd1VqvQ20yDywt6_9Q

A recent glimpse into the world of Kalki 2898 AD through Amitabh Bachchan’s character as Ashwatthama left fans in awe, particularly with the stunning de-aging transformation of the legendary actor. The character reveal video, a true pan-India teaser, showcased a blend of languages including Tamil, Telugu, Malayalam, Kannada, and English.

Directed by Nag Ashwin, Kalki 2898 AD is set to be a biggest cinematic event of the year. With an incredible cast and backed by Vyjayanthi Movies, it’s gearing up for its release on 27th June, 2024.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here