மார்வெல் ஸ்டுடியோஸின் அடுத்த படம்! அதிரடியாக வெளியான Deadpool & Wolverine ட்ரைலர்!
ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் ‘Deadpool & Wolverine’ டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மார்வெல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் இருந்து இன்னொரு சூப்பர் ஹீரோ படம் வெளியாக உள்ளது. மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர்களாக மாறிய படங்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தற்போது புதிய படம் வெளியாக உள்ளது. மார்வெல் ஸ்டுடியோவில் இருந்து அடுத்ததாக Deadpool & Wolverine படம் வெளியாக உள்ளது.
ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்ச்சராக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சுவாரஸ்யமாக உள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மீண்டும் ஒருமுறை மகிழ்விக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எம்மா கொரின், மொரீனா பாக்கரின், ராப் டெலானி, லெஸ்லி உக்காம்ஸ், கரண் சோனி, மேத்யூ மக்ஃபேடியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். Deadpool & Wolverine உலகம் முழுவதும் ஜூலை 26 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Tamil Trailer: https://youtu.be/FvH1kuRCQrM?si=2UdAfg_8y-TfJeLD
Telugu Trailer: https://youtu.be/L-kiatWK3gE?si=arM9EkKkcDUUEB6I