‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது.

0

நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’  எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது.

இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு ‘கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் தருணத்தில், ‘கல்கி 2898 AD’ படத்தில் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் ஏற்றிருக்கும் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிடும் நிகழ்வு, மத்திய பிரதேச மாநிலத்தின் புனித நகரமான நெமாவார் தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமையப் பெற்றிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது ரசிகர்களும், படக்குழுவினரும்,  ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான இடமாக நெமாவாரை தேர்ந்தெடுத்தது.. இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இன்றும் அஸ்வத்தாமா.. நெமாவார் மண்ணில் நடமாடுவதாக மக்களிடத்தில் நம்பிக்கை இருக்கிறது.

இதனிடையே அமிதாப்பச்சன் தனது கதாபாத்திரத்தின் ஒரு காட்சியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதுடன்,  ” இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ தரமான தயாரிப்பு.. நேர்த்தியான முறையில் செயல்படுத்தும் திட்டம்.. நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாதது” என்றும் பகிர்ந்து கொண்டார்.

இணைப்பிற்கு கிளிக் செய்யவும்
https://x.com/srbachchan/status/1782008003190718662?s=46

‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான் டியாகோ காமிக் கானில் அதன் அற்புதமான அறிமுகத்திற்குப் பிறகு அதிர்வலைகளை உருவாக்கி, உலக அளவில் கவனத்தைக் கவர்ந்து, அங்கீகாரத்தை பெற்றது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில்,, ‘கல்கி 2898 AD’  ஒரு பன்மொழி திரைப்படமாக தயாராகிறது. இந்தத் திரைப்படம் புராணங்களால் ஈர்க்கப்பட்டு எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைவு கதையாக உருவாகி இருக்கிறது.


Amitabh Bachchan takes on the role of Ashwatthama in ‘Kalki 2898 AD’, Character unveiled in a monumental projection in Nemawar, Madhya Pradesh


– It is believed that Ashwatthama still walks the grounds of Narmada Ghat, Nemawar, 

Filmmaker Nag Ashwin’s upcoming magnum opus ‘Kalki 2898 AD’ has been making major buzz as a groundbreaking mythology science fiction epic. Amidst the excitement surrounding the film, the unveiling of megastar Amitabh Bachchan’s character as Ashwatthama in ‘Kalki 2898 AD’ took place through a monumental projection in the holy city of Nemawar, Madhya Pradesh, garnering immense love from fans, locals and the media present.

Choosing Nemawar as the location for Amitabh Bachchan’s grand character reveal today further emphasises its importance, as it’s believed that Ashwatthama still walks the ground of Nemawar.

Meanwhile, Amitabh Bachchan took to social media to share a glimpse of his character with a note saying, “It’s been an experience for me like no other. The mind to think such a product, the execution  the exposure to modern technology and above all the company of colleagues with stratospheric Super star presence  ..”

https://x.com/srbachchan/status/1782008003190718662?s=46

Featuring a stellar cast including Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone and Disha Patani in key roles, ‘Kalki 2898 AD’ made waves after its spectacular debut at San Diego Comic-Con last year, earning massive global acclaim. Directed by Nag Ashwin and Produced by Vyjayanthi Movies, ‘Kalki 2898 AD’ is a multilingual film, a mythology-inspired sci-fi spectacle set in the future.
https://youtu.be/t_E5zjFj6Ew

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here