‘கார்த்தி26 ‘ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான நலன் குமாரசாமி இயக்கத்தில், முதன் முதலாக கார்த்தி இணைந்திருப்பதாலும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சர்வதேச தர முத்திரையுடன் தயாராவதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது