ஸ்ரீவாரி ஃபில்ம் பி.ரங்கநாதன் வழங்கும், மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ஸ்ரீவாரி ஃபில்ம் பி.ரங்கநாதன் வழங்கும், மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு ரசனையான பொழுதுபோக்கு படத்தை உருவாக்குவதில் பெயர் பெற்ற ஸ்ரீவாரி ஃபில்ம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காதலே காதலே’ என்ற தனது அடுத்தப் படம் மூலம் ரசிகர்களைக் கவர உள்ளார். ஆர். பிரேம்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் சரியாகத் திட்டமிட்டு, படக்குழு அதை செயல்படுத்தி வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்துள்ளது.

தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் இது குறித்து மகிழ்வுடன் பகிர்ந்திருப்பதாவது, “ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது சரியான குழு மற்றும் திட்டமிடல் மூலம் முழுமையடைகிறது என்று நம்புகிறேன். ‘காதலே காதலே’ படத்தின் மொத்தக் குழுவினரும், ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி, ஒரே ஸ்ட்ரெச் ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளராக என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

ஒரு இயக்குநரின் திறமை சிறந்த படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் அனைத்தையும் திறமையாக நிர்வகிப்பது மற்றும் திட்டமிட்டபடி அனைத்தையும் முழுமையாக செய்வதும்தான். இயக்குநர் பிரேம்நாத் இந்தத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மஹத் ராகவேந்திரா திறமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மீனாட்சி கோவிந்தராஜன் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதியை அறிவிப்போம்” என்றார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ஜோ’ மற்றும் நம் இதயங்களை வென்ற மற்ற காதல் எண்டர்டெயினர் படங்களைப் போலவே உங்கள் மனதைக் கவரும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக ‘காதலே காதலே’ இருக்கும்.

நடிகர்கள்: இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என உறுதியளிக்கிறது.

‘சீதா ராமம்’ படப்புகழ் விஷால் சந்திரசேகர் படத்திற்கு இசையமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ். சாகு தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துக்கொள்கிறார். தியாகு இந்தப் படத்தின் எடிட்டர். ‘காதலே காதலே’ திரைப்படத்தின் மேஜிக்கல் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *