நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் டீசர் மார்ச் 4 அன்று வெளியாகிறது!

0

நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பேனரில் பிரபல தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசு வர்மா பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான மியூசிக் புரோமோஷனாக படத்தில் இருந்து சார்ட்பஸ்டர் முதல் பாடல் ‘நந்தனந்தனா’ சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்சேஷனல் ஹிட் ஆகியுள்ளது. அப்படி இருக்கும்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், படத்தின் டீசர் அறிவிப்பு மூலம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் டீசர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. ஃபேமிலி என்டர்டெயினர் மீதான எதிர்பார்ப்பை டீசர் அதிகரிக்கச் செய்வது உறுதி.

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு:
ஒளிப்பதிவு: கே.யு. மோகனன்,
இசை: கோபி சுந்தர்,
கலை இயக்குநர்: ஏ.எஸ். பிரகாஷ்,
எடிட்டர்: மார்த்தாண்டன் கே.வெங்கடேஷ்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா,
தயாரிப்பாளர்கள்: ராஜு – சிரிஷ்,
எழுதி இயக்கியவர்: பரசுராம் பெட்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here