சத்தமின்றி முத்தம் தா விமர்சனம்

0

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் பிரியங்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறார் பிரியங்கா. அதன்பிறகு, நான்தான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். பின் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சில காலம் ஓய்வெடுக்கிறார் பிரியங்கா. இப்படியாக செல்லும் போது, அவ்வப்போது ஸ்ரீகாந்த் சிலரை கொடூரமாக கொன்று வருகிறார். பிரியங்காவின் கண்முன்னே இருவரை கொல்கிறார். வாழ்க்கை வெறுத்துப் போனது போல் இருக்கும் ப்ரியங்காவிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. அடுத்து என்ன நடந்தது.?? ஸ்ரீகாந்த் யார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ் இருவரும் போட்டி போட்டு தங்களது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரகு கதாபாத்திரத்தில் வந்த வியான், தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்திருக்கிறார். 

கதை, திரைக்கதை, பின்னணி இசை, பாடல் என படத்தில் பல பாசிடிவ் விஷயங்களை கொட்டி வைத்திருக்கிறார் இயக்குனர். யுவராஜ்ஜின் ஒளிப்பதிவு வெளிச்சம் காட்டியிருக்கிறது.

பல ட்விஸ்ட் காட்சிகள் படத்தில் இருப்பதால், சத்தமின்றி முத்தம் தா படத்தை நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here