பர்த்மார்க் படம் எப்படி இருக்கிறது ?

பர்த்மார்க் படம் எப்படி இருக்கிறது ?

மனைவியின் பிரசவ தருணத்தில் ஒரு தம்பதியின் புரிதலும், அவர்களுக்குள்ளான பிரச்சனைகளும் தான் படத்தின் மையம்.

ராணுவ வீரரான ஷபீர் தனது மனைவி மிர்னாவுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்க்காக மலைப் பகுதியில் இருக்கும் தவந்திரி பர்த்திங் வில்லேஜ் .அதாவது இயற்கை முறையில் பிரசவம் பார்க்கும் மையத்திற்கு அழைத்து செல்கிறார்.

மிர்ணாவுக்கு அந்த புதிய இடம் பயத்தையும் சந்தேகத்தையும் அளிக்கிறது. அந்த மருத்துவ மையத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாள். இந்த மையத்தில் சிகரெட் மற்றும் மது குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது . இந்த தடையை மீறி சிகரெட் பிடிக்கிறார் நாயகன் இதை தட்டி கேட்ட வேலைக்காரனை கொலை முயற்சி செய்கிறார்.

இரவு நேரத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு அவ்வப்போது வெளியே செல்கிறான் ஷபீர் .இதனால் மிர்ணாவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளும் சபீர் இந்த குழந்தை தன்னுடைய இல்லை என்று கூறி அந்த கருவை அளிக்க நினைக்கிறான். கணவனிடம் இருந்து தப்பி செல்லும் மிர்ணா குழந்தையை உயிருடன் பெற்றெடுத்தாரா ? இல்லையா? என்பதே ‘பர்த் மார்க்’ படத்தின் மீதிக்கதை.

ராணுவ வீரராக நடித்திருக்கும் ஷபீர் மன அதிர்ச்சிக்கு ஆளாகிய மனிதராகவும் சந்தேகப்படும் கணவனாகவும் இரு மாறுபட்ட உணர்வுகளை கொடுத்திருக்கிறார் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் மிர்ணா நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் வேதனைகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

செபாஸ்டின் கேரக்டர் இந்திரஜீத் வாய் பேச முடியாதவராக அருமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தவந்திரி மருத்துவமனையில் வரும் அம்முலு பாத்திரத்தில் வரும் தீப்தி ஓரியண்டலு வும் மருத்துவராக ஆஷா பாத்திரத்தில் வரும் பொற்கொடி என் படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது . பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு அடர்ந்த காடு மற்றும் மலை பகுதிகளை அழகாக காட்சிப்படுத்திருக்கிறார்.

வழக்கமாக பார்க்கும் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் அதை சரியாகவும் செய்திருக்கிறார் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்ற பார்ப்போடு கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.

திரையில் பரிசோதனை முயற்சிகள் வருவது அரிது. மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் இப்படம் முழுக்க முழுக்க பரிசோதனை முயற்சியில் எடுத்திருக்குகிறார்கள். நார்மலான ஆடியன்ஸ் இதை ஏற்றுக்கொள்வது கடினம். மற்றபடி இது ஒரு நல்ல முயற்சி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *