Lover Movie Review
குட் நைட் மணிகண்டன் நடிப்பில் இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் லவ்வர்.
இன்றைய காதலர்களின் பிரதிபலிப்பாக வெளிவந்துள்ளது லவ்வர்.
தனது விரக்தியான வாழ்க்கையின் வலியை தன் காதலி மீது திணிக்கும் நாயகன் மணிகண்டனின் அதீத உரிமையால், நாயகி ஸ்ரீ கெளரி ப்ரியா பல சிக்கல்களை சந்திக்கிறார். ஒவ்வொரு முறையும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், மணிகண்டனின் செயலை மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீ கெளரி ப்ரியா, ஒரு கட்டத்தில் மணிகண்டனை பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். 6 வருட காதல் திடீரென்று இல்லை என்றால் எப்படி, என்று காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் மணிகண்டன், காதலியை சமாதானப்படுத்த முயற்சிக்க, வழக்கம் போல் அவரை ஸ்ரீ கெளரி ப்ரியா மன்னித்து ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
மணிகண்டனும், ஸ்ரீகௌரிப்ரியாவும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா மூலம் படம் பார்க்க பிரமிப்பாக உள்ளது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலம்.
காதல் பற்றி சரியான புரிதல் இல்லாமல், அந்த உறவை சிக்கலோடு கடந்து செல்லும் இளசுகளுக்கு காதல் என்றால் என்ன? என்பதை புரிய வைத்திருக்கும் இயக்குநர் பிரபுராம் வியாஸ், காதலின் கருப்பு பக்கங்களை காட்சிகளாக வடிவமைத்து பார்வையாளர்கள் பதற்றம் அடையும் அளவுக்கு படத்தை நகர்த்தினாலும், க்ளைமாக்ஸில் காதலை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி காதலர்களை கொண்டாட வைத்துவிடுகிறார்.
டாக்ஷிப் ரிலேஷன்ஷிப் பற்றிய பார்வை எவ்வளவு முக்கியம் அதன் தேவை என்ன என்பதை அழுத்தமாக சொல்லியுள்ளது இந்த லவ்வர்.