Chiclets Movie Review
தமிழில் ஒரு அடல்காமெடி படம், அதுவும் பெண்களின் செக்ஸ் ஆசைகளை சொல்லும்
படமாக வந்துள்ளது சிக்லெட்ஸ்
நயன் கரிஷ்மா, அம்ரிதா மற்றும் மஞ்சிரா மூவரும் நண்பர்கள். சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை தொடுவதற்கு முன், தங்களுக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள்.
தங்களது மூன்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு செல்ல திட்டமிடுகின்றனர் மூவரும். தங்களது பெற்றோர்களிடம் பொய் சொல்லிவிட்டு மூவரும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க செல்கிறார்கள். பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வர, தங்களது பிள்ளைகளை தேடிச் செல்கிறார்கள் இறுதியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றினார்களா? இல்லையா? எனப்தே படத்தின் மீதிக்கதை.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மூன்று பெண்களின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் மற்றும் பாட்டி வேடத்தில் நடித்திருக்கும் நடிகை என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளது.
இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் முத்து முதல் பாதி கிளுகிளுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி கருத்துடன் பயணிப்பதால் படம் நன்றாகவே கவனிக்க வைக்கிறது. கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை ரசிப்பதற்கான தனி ரசிகர் வட்டம் இருந்தாலும், அதை ரசிக்கும்படி சொல்லாமல் முகம் சுழிக்கும் வகையில் விதத்தில் இருக்கிறது.
செக்ஸ் என்பது பொதுவானது என்பதோடு நம் பிள்ளைகளை வளர்ப்பு பற்றியும் அழுத்தமாக பேசியுள்ளது சிக்லெட்ஸ்.
நடிகர்கள்: சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜேக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால்
இசை: பால முரளி பாலு
இயக்கம்: முத்து
மக்கள் தொடர்பு யுவராஜ்