‘டெவில்’ – விமர்சனம்
சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் இசையமைத்திருக்கும் படம்.
ஒரு சிறுகதை சினிமாவாக மாறியிருக்கிறது.
விதார்த்துக்கும் பூர்ணாவிற்கும் திருமணம் நடக்கிறது. முதல் இரவிற்கு கூட இல்லாமல், தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க சென்று விடுகிறார். தொடர்ந்து பூர்ணாவை தள்ளியே வைத்துக் கொண்டே வருகிறார் விதார்த்.
திருமணம் ஆன சில நாட்களிலே கள்ளத்தொடர்பு விஷயம் பூர்ணாவிற்கு தெரிந்து விடுகிறார். ஒரு விபத்தில் திரிகனின் அறிமுகம் பூர்ணாவிற்கு கிடைக்கிறது. திரிகன் தனது தாயிடம் காணாத ஒரு பாசத்தை பூர்ணாவிடம் எதிர்பார்க்கிறார். பூர்ணாவிற்கும் மனம் அங்குமிங்குமாக அலைபாய்கிறது.
இந்த சூழலில்,அலுவலக பெண்ணனின் உண்மையான முகத்தை அறியும் விதார்த். தான் செய்த தவறை உணர்ந்து மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால், தனது கணவன் மீது காதல் கொள்ளும் பூர்ணாவின் இல்லற வாழ்க்கை இனிமையாக மாறுகிறது. இந்நிலையில் விதார்த் பூர்ணா தம்பதியர் வாழ்வில் திரிகனால் விதாரத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட நாயகி பூரணா விதார்த்தை அந்த பிரச்னையில் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘டெவில்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த் எப்போதும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்யக்கூடியவர் அதே போல இந்த படத்தை தேர்வு செய்திருக்கிறார். விதார்த்துக்கு அது மிக வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதிலும் தன்னை நிருபிக்கும் வகையில் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
மனைவியாக வரும் பூரணா .நம்பிக்கை துரோகத்தின் வலி தாங்காமல் தவிக்கும் கதாபாத்திரத்தை தன் விழிகளாலேயே நிறைவு செய்கிறார் அழகாகவும் அளவாகவும் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார் திரிகன் தனக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு செய்திருக்கிறார். மிஷ்கின் படத்தில் குறைவான காட்சிகள் வந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் மிஷ்கின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் இரவு நேரக் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்திருக்கிறார்.
தம்பதிகள் சூழ்நிலை காரணமாக மனம் தடுமாறி தவறான பாதைக்கு செல்லும் கதையை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஆதித்யா, அதை சுவாரஸ்யமாக கொடுத்து அனைவரின் பாராட்டை பெறுகிறார் இயக்குனர்.
எல்லோரின் மனதிற்குள் இருக்கும் டெவிலை அடையாளம் காட்டும் ஒரு படமாக வந்திருக்கிறது இந்த டெவில்.
நடிகர்கள்: விதார்த், பூர்ணா, திரிகன், சுபஸ்ரீ
இசை: மிஷ்கின்
இயக்கம்: ஆதித்யா
மக்கள் தொடர்பு சதீஷ்குமார்