மக்களின் இதயங்களை வென்ற டங்கி !! – 400 கோடி வசூலைக் கடந்து சாதனை

0

உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது டங்கி திரைப்படம். இந்த விடுமுறைக்காலத்தில் குடும்ப பார்வையாளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் படியான அற்புதமான் படைப்பாக அமைந்துள்ளது டங்கி திரைப்படம்.

இந்த ஃபீல் குட் சினிமாவை ரசிப்பதற்காக குடும்பங்கள் திரையரங்குகளில் திரள்வதால், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது! டங்கி வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்திருப்பதுடன், உலகம் முழுவதும் 400.40 கோடி வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது. மேலும்  இந்திய பாக்ஸ் ஆபிஸில் விரைவில் 200 கோடியை கடக்கவுள்ளது.

டங்கி படத்தின் அற்புதமான வெற்றியின் மூலம், ஷாருக்கான் 2023 இல் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். பதான், ஜவான், இப்போது டங்கி என  ஷாருக்கான் கடந்த  ஆண்டு முழுவதும் பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்துள்ளார். பதான் 1,050.30 கோடி வசூலித்தது, ஜவான் உலகளவில் வாழ்நாள் வசூல்  சாதனையாக 1,148.32 கோடி வசூலித்தது. இப்போது டங்கி 400 கோடியைத் தாண்டியுள்ளது. ஒரே வருடத்தில் மூன்று பிளாக்பஸ்டர்களை தந்து,  கிங்கான் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என நிரூபித்துள்ளார்.

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி உலக பாக்ஸ் ஆபிஸில் 400+ கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. தாயகத்தை இழந்து வாடும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையை நெருக்கமான உணரும் படைப்பாக அவர்களின் வலியைப் பேசும் படைப்பாக இதயம் வருடுகிறது டங்கி.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

https://x.com/redchilliesent/status/1742131936481657034?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA
Dunki continues to win hearts, Crossess 400 Cr. worldwide!The film is all set to enter the 200cr club in India as well
Dunki is indeed enjoying a phenomenal run in the theaters. People across age groups, families along with their loved ones continue to enjoy this heart-warming film, through the holiday season.

The strong word of mouth has constantly fuelled the film, with families thronging the theaters for pure feel good cinema! Resulting in commercial and cricial acclaim for Dunki. The film has garnered an impressive 400.40cr worldwide, crossing the 400cr barrier and is all set to cross 200cr at the indian box office.

With Dunki’s fabulous success, Shah Rukh Khan has made a hat trick in 2023. With Pathaan, Jawan, and now Dunki, the superstar has ruled the box office for the entire year. Pathaan grossed 1,050.30 Cr., whereas Jawan grossed 1,148.32 Cr. lifetime collection worldwide and now Dunki has crossed 400 Cr. keeping the spree of SRK of delivering blockbusters in a single year.

It’s 400+ Cr. for Rajkumar Hirani’s Dunki at the global box office. The film has indeed stuck the right chords amongst audiences worldwide who are finding it immensely relatable, evoking a feel-good factor that reminds them of their homeland or the feeling of being away from one’s home.

Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki now running in theaters successfully.

https://x.com/redchilliesent/status/1742131936481657034?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here