இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! இந்த மைல்கற்களை கடக்கும் ஷாருக்கின் இந்த வருடத்தின் 3வது படம் இது.

இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! இந்த மைல்கற்களை கடக்கும் ஷாருக்கின் இந்த வருடத்தின் 3வது படம் இது.

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 203.08 கோடி மற்றும் உலகளவில் 409.89 கோடியை குவித்துள்ளது.!

ராஜ்குமார் ஹிரானியின் அன்பை பொழியும் அற்புதமான படைப்பான டங்கி ரசிகர்களின் இதயங்களை மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இப்படம் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பொருத்தமான, நெருக்கமான படைப்பாக அமைந்துள்ளது.

பார்வையாளர்களிடமிருந்து வரும் பாசிட்டிவ் வார்த்தைகளுடன் டங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நகைச்சுவை மற்றும் அழுத்தமான கதை, பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ள டங்கி, குடும்பங்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு அழைத்து வருகிறது. இந்த  குடும்ப பொழுதுபோக்கு படம்  வசூலில் இந்தியாவில் மட்டும் 200 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் உலகம் முழுவதுமாக 400 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போது அனைவரும் விரும்பும் ஆக்‌ஷன் இல்லாத படமாக இருந்தாலும், காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பிய ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவுக்கு சான்றாக அமைந்துள்ள இப்படம், வசூலிலும் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

https://www.instagram.com/p/C1oocBZtKsZ/?igsh=YTBrcTZsNzZvZWczDunki enters the 200cr India and 400cr club worldwide! Garners immense love of audiences worldwide with its feel good content and strong word of mouth. This is SRK’s 3rd film this year to cross these milestones
Rajkumar Hirani’s Dunki is breaking barriers with its constantly rising box office collections! Garners 203.08 Cr. India net and 409.89 Cr. globally!

It’s worth marking that Rajkumar Hirani’s Dunki with its soft and endearing genre is ruling not just the hearts of the masses but also the box office. The film has witnessed tremendous crowds of family audiences in the cinema halls and has proved to be an immensely relatable tale for the people living abroad.

Dunki is enjoying an amazing run in the theaters with great positive word of mouth coming in from the audience. Filled with humor and heart, Dunki’s narrative has touched the hearts of viewers, driving families to theaters with its feel-good content. This ultimate family entertainer crossed the 200 Cr. mark in India and the 400 Cr. mark worldwide. Despite being a non-action film, Dunki has seen exceptional popularity and collections, standing as a testament to Rajkumar Hirani’s cinema, brimming with love, humor, and emotions.

Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is now released on the big screen.

https://www.instagram.com/p/C1oocBZtKsZ/?igsh=YTBrcTZsNzZvZWcz

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *