பிரசாந்த் வர்மாவின் ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில், 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
கற்பனைத் திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்திருக்கும் முதல் இந்திய அசல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனுமான்’. இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.
இந்த பிரம்மாண்டமான படைப்பின் திரையரங்க டிரைலர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. இந்த முன்னோட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஒருமித்த அளவில் நேர்மறையான வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கு பதிப்பு மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஏனைய மொழிகளிலும் வெளியான இந்த ஹனுமான் படத்தின் டிரைலருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 850 K லைக்குகளுடன்… 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று தற்போதும் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பிரசாந்த் வர்மா தனது அற்புதமான கதை சொல்லும் பாணியாலும் மற்றும் சர்வதேச தரத்திலான காட்சி அமைப்பினாலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
‘ஹனுமான்’ டிரைலர் வெளியான பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.Prasanth Varma’s Magnum Opus Hanu-Man’s Trailer Clocks Record 18M+ Views In 24 Hours
Creative director Prasanth Varma is coming up with the first Indian original superhero film Hanu-Man with Teja Sajja playing the lead. K Niranjan Reddy is bankrolling the project under the banner of PrimeShow Entertainment banner.
The theatrical trailer of this magnum opus was unveiled on Tuesday and it received a unanimous positive response from all corners. Not just the Telugu version, but the trailer got exceptional responses in Hindi and other languages as well.
The trailer clocked a record 18M+ views with 850K+ likes in 24 hours and is still trending top on YouTube. Prasanth Varma spellbound everyone with his brilliant story-telling and the visuals were of international standard.
Expectations for the movie reached sky high, after the release of the trailer. The movie is all set for a grand release worldwide on January 12th for Sankranthi.
https://www.youtube.com/watch?v=vT0vzlo0jG0