Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது  ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில்  இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.

தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி.  தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான,  “ஜவான்” மூலம் இந்தியாவையே  திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி.  ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு, தற்போது ‘ஜவான்’ மூலம் ஹாலிவுட்டில் இடம்பெற்ற முதல் தமிழ் இயக்குநராக சாதனை படைத்திருக்கிறார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, ‘ஜவான்’ திரைப்படம், இந்தியாவின் அத்தனை முன்னணி மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றது, 1080 கோடி ரூபாய் வசூலித்த, இந்தியாவில் முதல்ப்படமாக சாதனை படைத்தது.

பல புது வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இப்படம், ஹாலிவுட்டில் வருடா வருடம் வழங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ளது. ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்பு, உலகளவிலான படைப்புகளுடன் இடம்பிடித்திருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குநர் அட்லிக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *