‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி 51 படப் படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு !!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி 51 படப் படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு !!

7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில்,  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில்,  இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின்  படப்பிடிப்பு,  மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்து அம்சங்களுடன் முழு நீள  கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சைனீஸ் சண்டைக்ககலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள,  பிரம்மாண்ட  சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் மலேசியாவில் திரையில் இதுவரை காணாத  இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அனைத்து இடங்களில்  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படம் முழுதும் பயணிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.  இவர்களுடன் பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவங்கவுள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.”Makkal Selvan” Vijay Sethupathi 51 shooting completed in grandeur in Malaysia
Shooting of “Makkal Selvan” Vijay Sethupathi starrer ‘Vijay Sethupathi 51’, directed by Arumuga Kumar wrapped up

 Vijay Sethupathi 51 shot in never-seen-before locations in Malaysia with magnificent visuals

The shooting of ‘Makkal Selvan’ Vijay Sethupathi’s tentatively titled ‘Vijay Sethupathi 51’, directed by P. Arumuga Kumar, and produced by 7Cs Entertainment, filmed in grandeur across the elegantly transfixing locations of Malaysia, has been successfully completed now.

The entire film has its premise set against the backdrops of Malaysia, which marks the collaboration of director Arumuga Kumar and Vijay Sethupathi after ‘Oru Nalla Naal Paathu Soldren’. Vijay Sethupathi 51 will be an out-and-out commercial entertainer, with the perfect blend of romance, action, comedy, and sentiments.

Vijay Sethupathi 51, shot across Malaysia will offer a unique experience to audiences, as it has been filmed across locations that have been never seen on screens before. This includes jaw-dropping action sequences and breathtaking chasing episodes, featuring Chinese stunt director and Vijay Sethupathi.

The film’s final phase of shooting was done and completed at the prestigious and spiritual emblem of Malaysia – Pathumalai Murugan Temple. The ardent fans of Vijay Sethupathi across many places in Malaysia gathered to express their love and affection for the actor.

While Vijay Sethupathi plays the lead character, famous Kannada actress Rukmani Vasanth, plays the female lead character. Yogi Babu plays a pivotal role that will be seen throughout the film. P.S. Avinash, Divya Pillai, Bablu, Rajkumar, and many others are a part of this star cast.

 Karan Bagathur Rawat is cranking the camera, and Justin Prabhakaran is composing music. A.K. Muthu is overseeing the art department, and R. Govindaraj is the editor. Dinesh Subbarayan has choreographed mind-boggling action sequences for this film, which is produced in grandeur by 7Cs Entertainment.

 With the film’s shoot wrapped up, the postproduction work is progressing at the best pace, and will be completed soon. The production house will soon make official announcements on the teaser, trailer, audio, and worldwide theatrical release.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *