Joe Movie Review

0

ஜோ’ காதல் சொல்லும் படம் !!!

ரியோ நடிப்பில் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் வந்திருக்கும் ரொமான்ஸ் படம்

ஒரு காதல் இரு பெண்களின் வாழ்வில் என்ன செய்கிறது என்பதே படம்.

கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் ரியோ இதே கல்லூரியில் வந்து சேர்கிறார் கேரளாவை சேர்ந்த நாயகி மாளவிகா இருவரும் ஒரே வகுப்பு என்பதால் நாயகியை பார்த்ததும் நாயகனுக்கு காதல் வர முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்..

கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து கேரளாவிற்கு செல்கிறார் நாயகி மாளவிகா ஒரு கட்டத்தில் பெண் கேட்டு செல்கிறார் நாயகன் ரியோ அங்கு ஏற்படும் தகராறில் ரியோவை தவறாக புரிந்தது கொள்ளும் மாளவிகா பிரிந்து விடலாம் என்று கூறுகிறார்.

இதனையடுத்து மாளவிகாவிற்கு திருமண என்று தெரிந்து கொள்ளும் ரியோவின் நண்பர்கள் திருமணத்தை நிறுத்த ரியோவை அழைத்துக் கொண்டு கேரளா செல்கிறார்கள். அங்கு சென்று பார்க்கும் ரியோவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. இறுதியில் ரியோ அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே ‘ஜோ’ படத்தின் மீதிக்கதை.

ஜோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். கதைக்கு ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார். காதல், ரொமான்ஸ் ,செண்டிமெண்ட் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார். காதலுக்காக முழுநேர குடிகாரனாக மாறுவதும் அம்மாவுக்காக அதில் இருந்து மீண்டு வருவது என இயல்பாக நடித்திருக்கிறார்.. ரியோ இது போல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் சிவகார்த்திகேயன் போல ஒரு இடத்தை பிடிப்பார் வாழ்த்துக்கள்

நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா அழகாக இருப்பதுடன் அருமையாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் ரியோவின் மனைவியாக நடித்திருக்கும் பவ்யா கோபக்கார பெண்ணாக வருகிறார் . கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் சரியா ந தேர்வாக இருக்கிறார்கள் .

இசையமைப்பாளர் சித்து குமார், இசையில் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது . ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவில் தமிழக மற்றும் கேரளா பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கின்ற குறிஞ்சி பூ போல எப்போதாவது ஒரு முறைதான் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் காதல் படம் வரும் அப்படி வந்திருக்கும் படம்தான் ஜோ இந்த படத்தை பார்க்கும் பொது சேரனின் ஆட்டோகிராப் படத்தை ஞாபகபடுத்துகிறது . இயக்குனர் ஹரிஹரன் ராமின் உழைப்பு படம் பார்க்கும் போது தெரிகிறது அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஒரு நல்ல ரொமான்ஸ் படம் பார்த்த திருப்தியை தருகிறது ஜோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here