நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் படப்பிடிப்பு அதிரடியான ஆக்சன் காட்சியுடன் துவங்கியது

0

நேச்சுரல் ஸ்டார் நானி,  விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூவரும் இணையும் இரண்டாவது படைப்பான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் கடந்த மாதம் பூஜை போடப்பட்டது.  நேச்சுரல் ஸ்டார் நானியை தனித்துவமான அதிரடி அவதாரத்தில் காட்டிய இப்படத்தின் அறிமுக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.   DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இருவரும் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அதிரடி ஆக்சன் காட்சியுடன் இன்று ஹைதராபாத்தில்  தொடங்கியது. ராம்-லக்ஷ்மண் மாஸ்டர்கள் சாகச சண்டைக்காட்சியை வடிவமைக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் ஆக்ஷனுடன் சில வசன காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இப்படப்பிடிப்பில் நாயகன் நானி மற்றும் படத்தின் முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நடிகை பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், நானி வித்தியாசமான முரட்டுத் தோற்றத்தில் நடிக்கிறார், மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்மிகு  இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி
பேனர்: DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி ஜி
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
சண்டை காட்சிகள் : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Suryavin Sanikizhamai Shoot Begins With An Action Episode
Suryavin Sanikizhamai, which marks the second film in the combination of Natural Star Nani and Talented Director Vivek Athreya, was launched last month. This unique adrenaline-filled adventure received a terrific response for its Unchained video that presented Nani in an action avatar. DVV Danayya and Kalyan Dasari of DVV Entertainment are bankrolling the project on a large canvas with a high budget.

The film’s regular shoot commenced today with an action episode in Hyderabad. Ram-Lakshman masters are overseeing this fiery episode. Alongside action, some talkie parts will also be canned in this schedule. Nani and the main artists of the movie will be part of the shoot.

Nani sports a rugged look in the movie, where Priyanka Arul Mohan is the female lead, while Tamil Star Actor SJ Suryah will be seen in a crucial role. Leading technicians are working on this film. Sensational composer Jakes Bejoy scores the music, while Murali G is the cinematographer. Karthika Srinivas is the editor.

Suryavin Sanikizhamai is a Pan India film that will be released in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.

Cast: Nani, Priyanka Arul Mohan, SJ Suryah

Technical Crew:
Writer and Director: Vivek Athreya
Producers: DVV Danayya, Kalyan Dasari
Banner: DVV Entertainments
Music: Jakes Bejoy
DOP: Murali G
Editor: Karthika Srinivas
Fights: Ram-Lakshman
PRO: Yuvraaj
Marketing: Walls And Trends

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here